அனைத்துலக முத்தமிழ் முருக மாநாடு – 2024
ஆகஸ்ட் 24, 25 – 2024 அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி, பழனி, தமிழ்நாடு. இணைந்து நடத்ததும் அனைத்துலக முத்தமிழ் முருக மாநாடு பழனியில் இடம்பெறவுள்ளது.
மலையக மக்களின் வரலாறு, வாழ்வியலை பதியும் வகையில் ‘இலங்கை மலையகத்தில் முருக வழிபாடு – ஓர் சமூகவியல் நோக்கு’ எனும் தலைப்பில் ஆய்வுரை இடம்பெறவுள்ளது.
தமிழகத்தில் இதற்கு முன்னரும் முத்தமிழ் முருக மாநாடு இடம்பெற்றுள்ள நிலையில் மலையக சமூகம் பற்றிய கவனத்திலான கட்டுரை இடம்பெறுவது முதல் சந்தர்ப்பமாகிறது. உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு வரலாற்றில் முதல் முறையாக பதினோராவது ஆய்வு மாநாட்டில் மலையக கலை இலக்கியம் தொடர்பான கவனத்தை ஏற்படுத்திய அருணாசலம் லெட்சுமணன் அவர்களே மேற்படி தலைப்பிலான கட்டுரையை இம் மாநாட்டில் முன்வைக்க இருக்கிறார். கடந்த வருடம் பதினோராவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு மலேசியா, கோலாலம்பூர் நகரில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இம் மாநாட்டில் பங்கேற்பதற்கு முன்னரும் பல ஆய்வரங்குகளில் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் பின்னர் இடம்பெற்ற பல பன்னாட்டு ஆய்வரங்குகளில் மலையகம் தொடர்பான பிரங்ஞையை முன்வைத்து பல ஆய்வுக்கட்டுரைகளை முன்வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மலையகம் 200, பேராதனைப் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வரங்கு, மற்றும் உலக முத்தமிழ் மாநாடு – 2023, இந்து கலாசார அலுவல்கள் தினைக்களம் நடத்திய மலையக நாட்டார் வழக்காற்றியல் – 2023 ஆய்வரங்கம், கொழும்புத் தமிழ்ச் சங்கம், நடத்திய காலந்தோறும் தமிழர் கலைகள்- பன்னாட்டுக் கருத்தரங்கம் – 2024, கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடத்திய உலகத் தமிழ் கலை இலக்கிய மாநாடு – 2024 ஆகிய ஆய்வரங்குகளில் மலையகம் சமூகம் தொடர்பான வரலாற்று, வாழ்வியல் தடங்களை தனது ஆய்வுகள் ஊடாக வெளிக்கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. தமிழர்களின் பூர்வீகத்தோடு தொடர்புபட்ட முருக வழிபாடு தொடர்பான கவனத்தில் முதன்முறையாக மலையக மக்களோடு தொடர்புபடுத்தி ஆய்வுக்கட்டுரையை முன்வைக்கும் சந்தர்ப்பம் இதுவாகிறது. அண்மையில் ‘மலையகத்தில் பெண் தெய்வ வழிபாடு’ எனும் தலைப்பிலான விரிவான கட்டுரையை இவர் எழுதியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அக் கட்டுரை உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்களில் வெளிவந்து பலரது கவனத்தையும் பெற்றிருந்தமையும் கவனிக்கத்தக்கது. அருணாசலம் லெட்சுமணன் மத்திய மாகாணம், கொத்மலை வலய உனுக்கொட்டுவ தமிழ் வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றுவதோடு, நிகர் சமூக கலை இலக்கிய அமைப்பின் பிரதான அமைப்பாளராக செயற்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இம் மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக மலையக கலை இலக்கியத்துறையில் ஏலவே அறியப்பட்ட சாமிமலை வேலாயுதம் இராமர் அவர்களும் பயணமாகவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. செம்மொழி மாநாடு உட்பட்ட பல சர்வதேச ஆய்வரங்குகளில் பங்கேற்றவர். கொழும்பு, கொட்டாஞ்சேனை சென் அந்தனீஸ் ஆண்கள் பாடசாலையின் சிரேஸ்ட ஆசிரியர் என்பதோடு கவிதை மற்றும் புனைவுகள் துறையிலும் தடம் பதித்து வருகின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. நாடகத்துறையில் அதீத நாட்டம் கொண்ட வேலாயுதம் இராமர் மலையக கூத்து கலைகளை முன்னெடுப்பதிலும் மிகுந்த ஆர்வத்தை செலுத்தி வருகின்றமையும் கவனிக்கத்தக்கது. அண்மைக்காலமாக குறுந்திரைப்படங்கள், மற்றும் திரைப்படங்களிலும் தனது ஆளுமையை நிலைநிறுத்தி வருகின்றமையும் கவனத்திற்குறியதாகும். இம் மாநாட்டில் ‘இலங்கையில் முருக வழிபாடு’ எனும் ஆய்வுரையை நிகழ்துகின்றமையும் குறிப்பிடத்தக்கது. பல தேசிய, சர்வதேசிய ஆய்வரங்குகளில் மலையகம் தொடர்பான அவதானத்தில் பல ஆய்வுக்கட்டுரைகளை முன்வைத்துள்ளார்.