தலிபான் களின் புதிய சட்டங்களுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் பெண்கள் கடும் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.
ஆப்கானிஸ்தான் பெண்கள் பொது இடங்களில் பாடுவதற்கும் பேசுவதற்கும் தடை விதித்து தலிபான்கள் சமீபத்தில் புதிய சட்டங்களை விதித்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பெண்களின் குரலுக்குத் தடை இல்லை என்ற தலைப்பில் சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு இயக்கத்தை அந்நாட்டுப் பெண்கள் தொடங்கியுள்ளனர்.