ம.நவநீதன்
புசல்லாவை நிவ் பீகொக் தோட்ட மக்களின் பிரச்சினைகளை இனங்கண்டு தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்கான வழிவகைகளை மேற்கொள்வதற்கான புதிய மன்றம் உதயமானது.நிவ்பீ கொக் சமூக அபிவிருத்தி மன்றம் என்ற பெயரில் உதயமான இவ்வமைப்பினை தாபிப்பதற்கான பொதுக் கூட்டம் 02.09.2024 அன்று நிவ் பீகொக் தோட்டத்தில் இடம்பெற்றது.
இதன்போது சமூக அபிவிருத்தி மன்றத்திற்கான புதிய நிர்வாகக்குழு தெரிவு செய்யப்பட்டது. இவ்வமைப்பின் தலைவராக – M.விஜயக்குமார் தெரிவு செய்யப்பட்டார். செயலாளராக V.விஜயதர்ஷினி தெரிவானார்.
பொருளாளராக K.சரத்குமாரும் உபதலைவராக – S.சசிகுமாரும் உப செயலாளராக P.பவாணியும் தெரிவு செய்யப்பட்டதோடு மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்களாக K.பிரகாஷ்,P.விஜேந்திரகுமார், K.பாலக்கிருஷ்ணன்,L.கோகிலவேணி,T.திலகேஸ்வரி,B.சரோஜா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
மலையக நட்சத்திரக் கலைப்பேரவையின் ஏற்பாட்டில் கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் அனுசரணையினால் இச் சமூக அபிவிருத்தி மன்றம் தாபிக்கப்பட்டுள்ளது.மலையக பெருந்தோட்டப் பொது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் இனங்காணப்பட்டு அப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கான அணுகுமுறைகள் வடிவமைக்கப்பட்டு அவை செயலுருவாக்கம் பெறவிருப்பதாகவும் இன, மத ,சாதி அடிப்படையில் அன்றி சகலரும் நன்மையடையக்கூடிய வகையில் இதன் செயற்பாடுகள் அமையவிருப்பதாக மலையக நட்சத்திரக் கலைப் பேரவையின் தலைவர் மலையக வாசுதேவன் தெரிவித்தார்.