இன்று முதல் நாடளாவிய ரீதியில் ,ஒரு இலட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க லிட்ரோ காஸ் இலங்கை நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
எதிர்காலத்தில் காஸ் தட்டுப்பாடு ஏற்பட எந்த வாய்ப்பும் இல்லையென லிற்றோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
நான்காயிரம் மெற்றிக் தொன் காஸை ஏற்றிக்கொண்டு ஒரு கப்பல் நாட்டை வந்தடையும். 34 ஆயிரம் மெற்றிக் தொன் காஸிற்கான கட்டளை முன்வைக்கப்பட்டுள்ளது. இவற்றில் முதலாவது கப்பலே இலங்கை கடற்பறப்பை நெருங்கியிருப்தாகவும் அவர் தெரிவித்தார்.
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் எவ்வித அசௌகரியமும் இன்றி ,நுகர்வோர் எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.
இன்று ஆகக் குறைந்தது 117,000 எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க நிறுவனம் எதிர்பார்ப்பதாக தெரிவித்த அவர்,, எதிர்வரும் நாட்களில் இந்த நடவடிக்கை தொடரும் .மற்றொரு வகை ரிவாயு சிலிண்ரையும் விநியோகிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பண்டிகை காலத்தை நெருங்குவதால்; சந்தையில் எரிவாயு சிலிண்டர்களுக்கு கூடுதலான கிராக்கி நிலவுவதால் கடந்த வாரம் விநியோகம் வரையறுக்கப்பட்டிருந்தாக லிற்றோ காஸ் நிறுவனத்தின் தலைவர் குறிப்பிட்டார். மூன்று அல்லது நான்கு கப்பல்களில் காஸை இறக்குவற்கு போதுமான பணம் எப்போதும் நிறுவனத்திடம் காணப்படுகிறது. ஒரு கப்பல் காஸை இறக்குவதற்காக சுமார் 30 இலட்சம் டொலர்கள் தேவைப்படுகின்றன. கடந்த ஜூலை மாதம் முதல் நிறுவனம் நட்டத்தில் இயங்கவில்லை என திரு. முதித்த பீரிஸ் தெரிவித்தார்.