சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு கண்டி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு லொத்தர் சபையில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளை வேலை வாய்ப்புக்காக வழி நடத்தும் நிகழ்ச்சி நேற்று (12) கண்டி மாவட்ட செயலகத்தில் கண்டி மாவட்ட செயலாளர் சந்தன தென்னகோன் தலைமையில் இடம்பெற்றது.
இந்த வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக 10 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய லொத்தர் சபையினால் இன்று அதிர்ஷ்ட இலாப சீட்டு விற்பனை முகவர் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது.
மாற்றுத்திறனாளிகளை சமூகமயப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும், எதிர்காலத்தில் இது போன்ற பல தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கு திட்டமிடப்படும் என்று கண்டி மாவட்ட செயலாளர் சந்தன தென்னகோன் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் சம்பத் பண்டார ஜயசிங்க, வைத்தியசாலை மனநல மருத்துவர் செல்வி நிர்மலா சில்வா மற்றும் கண்டி தேசிய லொத்தர் சபையின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.