டிக்கோயா தரவளை விவேகானந்தர் இளைஞர் கழகத்தினூனாக தரவளை தமிழ் வித்தியாலத்தின் வேண்டுக்கோளுக்கிணங்க அதன் உட்கட்டமைப்பு வசதிகளையும் (குடிநீர் வசதி, கட்டிடங்களுக்கு வர்ணம் பூசுதல், பாதுகாப்பு வேலி அமைத்தல்) பாடசாலைக்கு தேவையான தளபாடங்கள் மற்றும் மாணவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் என அனைத்து பிரதான தேவைகளையும் பூர்த்தி செய்து இன்றைய தினம் பாடசாலை சமூகத்திடம் கையளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வு நுவரெலியா மாவட்டத்திற்கான இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் திரு. ரெங்கராஐ் அகிலேஷ் அவர்களுடைய தலைமையில் நடைப்பெற்றதுடன் இந்திகழ்வில் அதிதிகளாக டிக்கோயா தோட்ட முகாமையாளர் திரு.சந்திம பெர்ணான்டோ அவர்களும் ஹட்டன் வலயக்கல்வி பணிமனையின் பிரதிநிதியாக திரு.பி.அய்யாசாமி அவர்களும் சமூக சேவையாளர் திரு.சஜேந்திரா அவர்களும் பாடசாலையினுடைய அதிபர் திருமதி.செல்வக்குமார் அவர்களும் இளைஞர் கழகத்தின் உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.





