Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நுவரெலியா கல்வி வலயத்தில் தகவல் பரிமாற்றக் குறைபாடு – மாணவர்கள் தேவையற்ற அலைச்சலுக்கு உள்ளானதாக குற்றச்சாட்டு

August 3, 2026

நுவரெலியாவில் கனமழை: 55 குடும்பங்கள் பாதிப்பு மற்றும் இடபெயர்வு

August 3, 2026

2026 எல்.பி.எல்: பிளே-ஓஃப் சுற்றுக்கு முன்னர் அணிகளில் தொடரும் கடைசி நேர மாற்றங்கள்

August 3, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » பேராதனை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 21 வயது பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!
இலங்கை

பேராதனை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 21 வயது பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!

ThanaBy ThanaJuly 13, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

பேராதனை பொது வைத்தியசாலையில் அஜீரணக் கோளாறினால் பாதிக்கப்பட்டிருந்த தனது மகளுக்கு ஊசி ஒன்று செலுத்தப்பட்டதாகவும், இதன் காரணமாக தனது மகள் உயிரிழந்துள்ளதாக தாய் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அஜீரணக் கோளாறினால் பாதிக்கப்பட்டிருந்த 21 வயதான சாமோதி சந்தீபனி அண்மையில் கொட்டாலிகொட பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பேராதனை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இவர் பொத்தபிட்டிய அலகல்ல பிரதேசத்தில் வசிப்பவர் என தெரியவந்துள்ளது.

சிகிச்சையின் போது அவருக்கு செலுத்தப்பட்ட ஊசி மூலம் உடல்நிலை மோசமடைந்து உடல் நீல நிறமாக மாறியதாக சாமோதியின் தாய் தெரிவித்தார்.

“எனது மகளுக்கு வயிற்றில் வலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு வந்தேன். முதலில் கொட்டாலிகொடவுக்கு அழைத்து சென்றோம். பின்னர் 10 ஆம் திகதி பேராதனைக்கு அழைத்து வந்தனர். அதன் பிறகு எனது மகள் ICU வில் இருந்து 17 ஆம் நம்பர் வாட்டுக்கு மாற்றப்பட்டார்.

சுமார் 3.30 மணியளவில், என் மகளுக்கு சேலைன் கொடுத்தார்கள். அதன் பிறகு இரண்டு மருந்துகளை ஊசி மூலம் மகளுக்கு செலுத்தினர். பின்னர் மகளின் கண்களில் ஏதோ நடந்தது, எதோ நடக்கப்போகிறது என்று என் மனம் சொன்னது.

அதன் பிறகு என் மகள் பாத்ரூம் போய் சின்க்கில் தலையை வைத்தார். பின்னர் உடல் நீலமானது, கைகால்கள் நீலமாகி, என் மகள் சரிந்து விழுந்தார். நான் அலறியதும், தாதியர்கள் வந்து வாட்டுக்கு கொண்டு வந்தனர்.

அதன்போது என்ன மருந்து வழங்கீனர்கள் என கேட்டேன். ஆனால் இன்று மகள் இல்லை. எனக்கு ஒரே ஒரு மகள் மட்டுமே இருக்கிறாள். என் மகளுக்கு வேறு எந்த நோயும் இல்லை என தாய் மேலும் தெரிவித்தார்.

இதன்படி, யுவதியின் மரணம் தொடர்பான முறைப்பாட்டின் அடிப்படையில் பேராதனை வைத்தியசாலை மற்றும் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

யுவதியின் சடலம் தொடர்பில் தடயவியல் பரிசோதனை நடத்தப்படவுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நுவரெலியா கல்வி வலயத்தில் தகவல் பரிமாற்றக் குறைபாடு – மாணவர்கள் தேவையற்ற அலைச்சலுக்கு உள்ளானதாக குற்றச்சாட்டு

    August 3, 2026

    2026 எல்.பி.எல்: பிளே-ஓஃப் சுற்றுக்கு முன்னர் அணிகளில் தொடரும் கடைசி நேர மாற்றங்கள்

    August 3, 2026

    மகாவலி கங்கையை அண்மித்துள்ள பல தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்

    August 3, 2026

    சப்ரகமுவ, கண்டி மற்றும் நுவரெலியாவில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சிக்கு சாத்தியம்!

    August 3, 2026
    Editors Picks

    நுவரெலியா கல்வி வலயத்தில் தகவல் பரிமாற்றக் குறைபாடு – மாணவர்கள் தேவையற்ற அலைச்சலுக்கு உள்ளானதாக குற்றச்சாட்டு

    August 3, 2026

    நுவரெலியாவில் கனமழை: 55 குடும்பங்கள் பாதிப்பு மற்றும் இடபெயர்வு

    August 3, 2026

    2026 எல்.பி.எல்: பிளே-ஓஃப் சுற்றுக்கு முன்னர் அணிகளில் தொடரும் கடைசி நேர மாற்றங்கள்

    August 3, 2026

    மகாவலி கங்கையை அண்மித்துள்ள பல தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்

    August 3, 2026

    நுவரெலியா கல்வி வலயத்தில் தகவல் பரிமாற்றக் குறைபாடு – மாணவர்கள் தேவையற்ற அலைச்சலுக்கு உள்ளானதாக குற்றச்சாட்டு

    August 3, 2026

    நுவரெலியாவில் கனமழை: 55 குடும்பங்கள் பாதிப்பு மற்றும் இடபெயர்வு

    August 3, 2026

    2026 எல்.பி.எல்: பிளே-ஓஃப் சுற்றுக்கு முன்னர் அணிகளில் தொடரும் கடைசி நேர மாற்றங்கள்

    August 3, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.