மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்.15.07.2023.
ஜந்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் இயங்கும் கிராமோதய சபைகள் ஏற்பாட்டில் இன்று காலை 10.00 மணி 3.மணி வரை இரத்த தானம் நிகழ்வு மஸ்கெலியா பௌத்த விகாரை மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் யுவதிகள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.
குறிப்பாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் மற்றும் மவுஸ்சாக்கலை இராணுவ முகாமில் உள்ள இராணுவ சிப்பாய்கள் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட ஜந்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் உள்ள இளைஞர்கள் இரத்த தான நிகழ்வில் கலந்து கொண்டு இரத்தம் தானம் செய்தனர்.
நாவலப்பிட்டி ஆதார வைத்திய சாலையில் உள்ள இரத்த வங்கிக்கு சேகரிக்கப்பட்ட இரத்தம் மிகவும் பாதுகாப்பான முறையில் கொண்டு செல்லப்பட்டது.
இந்த நிகழ்வில் பேராதனை ஆதார வைத்தியசாலையில் உள்ள சிரேஷ்ட வைத்திய அதிகாரி நில்மினி லொக்குஹே தலைமையிலான வைத்திய குழுவினர் கலந்து கொண்டு இரத்தம் சேகரித்தனர்.
மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





