மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்.16.07.2023.
இன்று காலை ஹட்டன் பொலிசாருக்கு கிடைக்க பெற்ற தகவலை தொடர்ந்து மல்லியப்பூ சந்தியில் உள்ள இடத்திற்கு சென்று பார்வையிட்ட ஹட்டன் பொலிசார் அங்கு இறந்த நிலையில் காணப்பட்ட 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் கிடப்பதை கண்டு இறந்த நிலையில் உள்ள நபர் யார் என அடையாளம் காண பொது மக்கள் உதவியை நாடி உள்ளனர்.
சம்பவம் இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் மற்றும் ஹட்டன் நீதிமன்ற நீதிவான் சென்று பார்வை இட்ட பின்னர் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என ஹட்டன் வலய பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.



