லுணுகலை பகுதியில் பிரபல பாடசாலை ஒன்றின் தரம் 10 ல் கல்வி பயிலும் இரு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மாணவர் ஒருவர் காயமடைந்த நிலையில் லுணுகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இச்சம்பவம் தொடர்பில் காயமுற்ற மாணவனின் தாத்தாவினால் லுணுகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது பாடசாலை இடைவேளை நேரத்தில் ஒன்றாக இணைந்து உணவு உட்கொண்ட வேளை காயமுற்ற மாணவன் மற்ற மாணவனை கதிரையினால் தாக்கியதாகவும் அதனாலேயே குறித்த மாணவன் பதிலுக்கு தாக்கியதாகவும் தெரியவந்துள்ளது.
காயமுற்ற மாணவனின் தாயார் வெளிநாட்டில் பணி புரிந்து வருவதாகவும் தகப்பனால் கைவிடப்பட்ட நிலையில் தாத்தாவின் அரவணைப்பிலேயே வாழ்ந்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்கிய மாணவனை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த உள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.
