நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தின் பிரதி அதிபர் திருமதி நிர்மலாதேவி சுகனேஸ்வரன் 33 வருட கல்வி சேவையிலிருந்து அண்மையில் ஓய்வு பெற்றார்.
அப்புத்தளையை பிறப்பிடமாக கொண்ட இவர் தனது ஆரம்பக் கல்வியை அப்புத்தளை லிட்டில்புலவர் கொன்வன்டிலும் இடைநிலைக்கல்வியை பண்டாரவளை சென்மேரிஸ் கல்லூரியிலும் உயர் கல்வியை பண்டாரவளை சென்ஜோசப் கல்லூரியிலும் கற்றார்.
1990 ஆம் ஆண்டு ஆசிரியர் சேவையில் இணைந்துகொண்ட இவர். நுவரெலியா புனித சர்வேரியார் கல்லூரியில் தனது முதல் நியமனத்தை பெற்று அங்கு 2 வருடங்கள் கடமையாற்றினார்.
தேசிய கல்வி நிறுவகத்தின் தொலைக்கல்வி ஊடாக தனது ஆரம்பக்கல்வி ஆசிரியர் பயிற்சி நெறியை நிறைவு செய்த இவர் தொடர்ந்து கந்தப்பளை மெதடிஸ்ட் கல்லூரி, வட்டகொடை தமிழ் மகா வித்தியாலயம்,லிந்துலை அக்கரகந்த தமிழ் வித்தியாலயம், லிந்துலை சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலயம் போன்ற பாடசாலைகளில் ஆசிரியராக கடமையாற்றினார்.
2012 ஆம் ஆண்டு நடைப்பெற்ற அதிபர் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்திற்கு பிரதி அதிபராக நியமனம் பெற்றார். அங்கு தொடர்ச்சியாக பிரதி அதிபராக சேவையாற்றிய இவர் தனது 60 ஆவது வயதில் கடந்த வாரம் ஓய்வு பெற்றார்.
இவர் அப்புத்தளையை சேர்ந்த முத்துக்கருப்பன் செல்வமணி தம்பதியினரின் மூன்றாவது புதல்வியாவார்.
33 ஆண்டுகால கல்விச் சேவையிலிருந்து ஓய்வுபெற்ற இவரை தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபர் கிருஸ்ணசாமி தலைமையில் ஆசிரியர் குழாம், பாடசாலை அபிவிருத்தி சங்கம், பழைய மாணவர் ஒன்றியம், உயர்தர மாணவர் குழாம் ஆகியோர் ஒன்றிணைந்து கௌரவித்தனர்.
இந்நிகழ்வில் அதிபர் கிருஸ்ணசாமி,பிரதி அதிபர் ஜெகதீசன்,கோட்டக்கல்விப் பணிப்பாளர் ஜெகதீஸ்வரன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
தலவாக்கலை பி.கேதீஸ்



