கண்டி-வலயமட்ட ரீதியாக நடைபெற்ற தமிழ் தின போட்டியில் பல பாடசாலைகளின் மாணவர்கள் பங்குப் பற்றி தங்கள் திறமையை வெளிக்காட்டியுள்ளனர்.
குறித்த போட்டிகள் கடந்த சனிக்கிழமை 15/07/2023 அன்று ரஜவலை இந்து தேசிய கல்லூரியில் இடம்பெற்றன.
அந்த வகையில் கண்டி கெலாபொக்க பிரேதேசத்தில் அமைந்துள்ள க /வ அபிராமி தமிழ் தேசிய பாடசாலை மாணவர்கள் பங்குபற்றிய 19 போட்டிகளில் வெற்றிகளை தனதாக்கிக்கொண்டனர்.
நாடக போட்டியில் இரண்டாம் இடம்
பேச்சு போட்டி முதலாமிடம்
தமிழ் அறிவு போட்டியில் இரண்டாம் இடம்
தனி நடனம் மேற்பிரிவு இரண்டாம் இடம்
தனி நடனம் கீழ்ப் பிரிவு இரண்டாம் இடம்
மணவர்களுக்கு பயிற்றுவித்த அபிராமி பாடசாலையின் அதிபர், உப அதிபர், பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கு மலையகம்.lk சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கின்றோம்.
டிலாந்தி





