பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பசறை பொலிஸ் நிலையத்தில் வைத்து கைதி ஒருவரை பார்வையிட பொலிஸ் நிலையத்திற்கு வருகைதந்த இளைஞர்
ஒருவரினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கைதிக்கு கையடக்க தொலைபேசி கொடுக்க முட்ட போது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கையடக்க தொலைபேசி கைதிக்கு கொடுக்க முடியாது என தெரிவித்த போது ஆத்திரம் அடைந்த இளைஞன் பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இளைஞன் பசறை மீரியபெத்த பகுதியை சேர்ந்த 23 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இளைஞன் பசறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போது எதிர்வரும் 02ம் திகதி வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
ராமு தனராஜா

