Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நோர்வுட் பிரதேச செயலக அஸ்வெசும மோசடி: 14 ஊழியர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர் – CID விசாரணை தீவிரம்!

October 15, 2026

வீடற்ற மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்*

October 15, 2026

பிரதேச சபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை நவம்பர் 15 க்கு முன்னர் அபிவிருத்திக்கு செலவிட வேண்டும் -கொட்டகலை பிரதேச சபை தலைவர்  

October 15, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » தோட்டப் பகுதிகளை அண்டிய எத்தனை மதுபானக் கடைகள் நடத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளன-சஜித்
மலையகம்

தோட்டப் பகுதிகளை அண்டிய எத்தனை மதுபானக் கடைகள் நடத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளன-சஜித்

ThanaBy ThanaJuly 20, 2023No Comments3 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

பல வருடங்களாக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இந்நாட்டிற்கு பெருமளவிலான அன்னியச் செலாவணியை ஈட்டித் தருவதற்குத் தமது உழைப்பை வழங்கியுள்ளனர்.என நாடாளுமனத்தில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார். ,மேலும் அவர் இவ்வாரு மலையக மக்கள் தொடர்பில் தனது ஆதங்கத்தை பதிவு செய்தார் எனினும், இன்றும் இத்தோட்ட மக்கள் மிகவும் குறைந்த வசதிகளிலேயே தமது வாழ்வை நடத்தி வருகின்றனர். தோட்டப் பிள்ளைகள் கற்பதற்கு பாடசாலைகளில் வசதிகள் மிகக் குறைவு. மிகவும் கடினமான பாதைகள் வழியாகத்தான் பாடசாலைகளுக்குச் செல்ல வேண்டியுள்ளது. முறையான போக்குவரத்து வசதி இல்லாததால், பிள்ளைகள் நீண்ட நேரம் வீதியோரங்களில் நிற்க வேண்டியுள்ளது.

மிகவும் மோசமான வசதிகளின் கீழே பலர் லைன் அறைகளில் இன்னும் வாழ்கின்றனர். எனவே, இந்தத் தோட்டச் சமூகங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்க வேண்டும். தோட்ட மக்களை வறுமையில் இருந்து விடுவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இதன் பிரகாரம், இதனை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையாகக் கருதி, பின்வரும் கேள்விகளுக்கு அரசாங்கத்திடம் இருந்து குறிப்பிட்ட பதில்களையும் விளக்கங்களையும் எதிர்பார்க்கிறேன்.

01.மலையகத் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்க உத்தேசிக்கப்பட்ட ரூ.1000/- கொடுப்பனவுத் தொகையை எந்த தோட்டக் கம்பனிகள் வழங்குவதில்லை என்பதை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளதா? அவ்வாறெனில் அவை யாது? அரசாங்கம் முன்வைத்த கொடுப்பனவை வழங்காமைக்கு தோட்ட நிறுவனங்கள் கூறும் காரணங்கள் என்ன? இது தொடர்பாக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை என்ன?

02.தோட்டத் தொழிலாளர்கள் சார்பாக அரச, தனியார் மற்றும் இணைந்த தோட்டக் கம்பனிகள் ஊழியர் சேம நிதியம் (EPF) மற்றும் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியம்(ETF) ஆகியவற்றிற்குச் செலுத்த வேண்டியமொத்தத் நிலுவைத் தொகை எவ்வளவு? இவ்வாறு நிலுவையில் உள்ள நிதியை செலுத்த வேண்டியநிறுவனங்கள் எவை? அந்த நிறுவனங்கள் ஒவ்வொன்றும் எவ்வளவு நிலுவைத் தொகையை செலுத்தவேண்டியுள்ளது என்பதை தனித்தனியாக வழங்க முடியுமா? முடியாவிட்டால் ஏன் முடியாது?

03.நுவரெலியா, பதுளை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் இந்திய உதவித் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 60 பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் வகுப்பு அறையை (Smart Class Room) நிறுவும் திட்டம் ஆரம்பிக்கப்படும் என தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் பாராளுமன்றத்தில் கருத்துக்களை முன்வைத்திருந்தார். இந்தத் திட்டத்திற்கு இந்திய உதவி எவ்வளவு தொகை கிடைத்தது? இம்மாவட்டங்களில் எந்தெந்த பாடசாலைகளில் இத்திட்டம் மேற்கொள்ளப்படும் என்பது கண்டறியப்பட்டுள்ளதா?அவ்வாறெனில்அவை யாவை? அதன் தற்போதைய முன்னேற்றம் யாது? இந்த திட்டம் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என்றால், எப்போது ஆரம்பிப்பது என்று எதிர்பார்க்கப்படுகிறது? இத்திட்டத்தின் கீழ் இனங்காணப்பட்ட பாடசாலைகள் தவிர்ந்த பெருந்தோட்டத்துறையில் பிள்ளைகள் கல்வி கற்கும் ஏனைய பாடசாலைகளில்ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் வசதிகளை மேம்படுத்த அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?

04. இந்த ஆண்டு தோட்ட மக்களுக்காக 3,225 வீடுகள் இந்திய உதவியின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ளதாக விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு இந்திய உதவி எவ்வளவு தொகை கிடைத்தது? இதுவரை எத்தனை வீடுகள் நிர்மானிக்கப்பட்டுள்ளன? அந்த வீடுகள் தற்போது தோட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா? அவ்வாறு வழங்கப்படவில்லை என்றால், பெருந்தேட்ட மக்களுக்கு எப்போது இந்த வீடுகளை வழங்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது? இதற்கு மேலதிகமாக, தோட்ட மக்களின் வீட்டுக் கனவை நனவாக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?

05. இந்திய அரசின் ஆதரவுடன் மலையகத் தமிழர்களுக்கான அரச பல்கலைக்கழகம், தாதியர் பயிற்சி நிறுவனம், விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM Subjects) ஆகிய பாடங்களுக்குஆசிரியர் பயிற்சிக் கல்லூரியை நிறுவுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சி முன்மொழிந்திருந்தது. ஜனாதிபதியின் எதிர்வரும் இந்திய விஜயத்தின் போது இது தொடர்பில் இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடப்படுமா?

06. பெருந்தோட்டங்கள் தொடர்பில் தற்போது எந்தெந்த காணிகள் பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்தப்படவில்லை என்பதை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளதா? அடையாளம் கண்டுள்ளது என்றால், ஒவ்வொரு பகுதியிலும் எவ்வளவு இடம் உள்ளது? இந்த இடங்களில் எவ்வளவு நிலம் தோட்டமக்களுக்கு மீள் பயிர்ச்செய்கைக்காக வழங்கப்பட்டுள்ளது? அவை வெற்றிகரமாக பயிரிடப்படுவதை அரசாங்கம் கன்காணித்துள்ளதா? தொடர்ந்து விவசாயம் செய்யாத தோட்டங்களை பயிர்ச்செய்கைகளுக்காக பெருந்தோட்ட மக்களுக்கு கொடுத்து வாழ்க்கை தரத்தை உயர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா?

07. 2020 ஆம் ஆண்டிற்குப் பின்னர், நுவரெலியா, கண்டி, பதுளை, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, அவிசாவளை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் தோட்டப் பகுதிகளை அண்டிய எத்தனை மதுபானக் கடைகள் நடத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளன? இவ்வாறு அனுமதி வழங்குவதில்உரிய அளவுகோல்கள் உரியவாறு பின்பற்றப்பட்டுள்ளதா? அவ்வாறு பின்பற்றப்படவில்லை என்றால், ஏன்பின்பற்றப்படவில்லை.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நோர்வுட் பிரதேச செயலக அஸ்வெசும மோசடி: 14 ஊழியர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர் – CID விசாரணை தீவிரம்!

    October 15, 2026

    பிரதேச சபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை நவம்பர் 15 க்கு முன்னர் அபிவிருத்திக்கு செலவிட வேண்டும் -கொட்டகலை பிரதேச சபை தலைவர்  

    October 15, 2026

    நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

    October 15, 2026

    கனடா, டொரோண்டோ உலகத் தமிழ் ஆய்வு மாநாடு – 2026 இல் ஆய்வாளர், அருணாசலம் லெட்சுமணன் அவர்களது ஆய்வுரை இடம்பெறவுள்ளது.

    October 14, 2026
    Editors Picks

    நோர்வுட் பிரதேச செயலக அஸ்வெசும மோசடி: 14 ஊழியர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர் – CID விசாரணை தீவிரம்!

    October 15, 2026

    வீடற்ற மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்*

    October 15, 2026

    பிரதேச சபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை நவம்பர் 15 க்கு முன்னர் அபிவிருத்திக்கு செலவிட வேண்டும் -கொட்டகலை பிரதேச சபை தலைவர்  

    October 15, 2026

    நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

    October 15, 2026

    நோர்வுட் பிரதேச செயலக அஸ்வெசும மோசடி: 14 ஊழியர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர் – CID விசாரணை தீவிரம்!

    October 15, 2026

    வீடற்ற மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்*

    October 15, 2026

    பிரதேச சபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை நவம்பர் 15 க்கு முன்னர் அபிவிருத்திக்கு செலவிட வேண்டும் -கொட்டகலை பிரதேச சபை தலைவர்  

    October 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.