இன்றைய தினம் (20.07.2023) இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் ஹட்டன் கல்வி நிலையத்தின் உதவி பணிப்பாளர் கே.ஜி.தரங்க தில்ருக்க்ஷி அவர்களின் ஏற்பாட்டில் புதிய மாணவர்களை உள்வாங்கும் நிகழ்வும் குறுகிய கால பாடநெறியினை பயின்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
மேலும் இந்த நிகழ்வில் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் உதவி பணிப்பாளர் ஏனைய உத்தியோகத்தர்கள் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் பழைய மாணவ மாணவிகளும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் இந்த நிகழ்வில் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் ஹட்டன் கல்வி நிலையத்தின் ஊடாக குறுந்திரைப்படமும் வெளியிடப்பட்டது.
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் வரலாற்றில் குறுந்திரைப்படம் வெளியிடப்பட்டது இதுவே முதன் முறையாகும்.









