மஹகளுகொல்ல கொங்கஸ்பிட்டிய பிரதேசத்தில் உள்ளுரில் தயாரிக்கப்பட்ட மருந்து துப்பாக்கியுடன் ஒருவர் நேற்று (21) கைது செய்யப்பட்டதாக மஹகளுகொல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மொனராகலை, கந்தவுடபங்குவ, கொங்கஸ்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 17 வயதுடைய இளைஞர் என பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்
ராமு தனராஜா
