பதுளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பதுளை மஹிங்கனை வீதி 7 கட்டை தல்தென பகுதியில் கால்வாய் யில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
மஹியங்கனை பதியத்தலாவை வீதியில் 5கட்டை பகுதியில் வசித்து வரும் 27வயதுடைய நபரே
காதலியை பார்க்க பதுளை தல்தென பகுதிக்கு நேற்று வருகை தந்த நிலையில் சடலமாக கால்வாய் ஒன்றின் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் தனது காதலியின் வீட்டில் தங்கி இருந்த நிலையில் காதலியின் வீட்டில் இருந்து 500மிட்டர் தொலைவில் உள்ள கால்வாய் ஒன்றின் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜா

