டி சந்ரு திவாகரன்
நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரிமிட்டி பகுதியில் கொழும்பு பிலியந்தலையிலிருந்து நுவரெலியா நகருக்கு பயணித்த கெப் ரக வாகனமொன்று இன்று முற்பகல் (21) விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தில் அதில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
அவர்கள் அனைவரும் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வாகனத்தின் வேகத்தை கட்டுபடுத்த முடியாமல் போனதால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
இவ்விபத்துத் தொடர்பில் நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

