அனுமதி பத்திரம் இன்றி மரக்குற்றிகளை ஏற்றி சென்ற லொறி ஒன்றை ஹாலிஎல பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
ஹாலிஎல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ரொக்கத்தன்ன பகுதியில் இருந்து பதுளை நோக்கி டேப்பன்டைன் மரக்குற்றிகளை ஏற்றி சென்ற லொறி ஒன்றை ஹாலிஎல நகரில் வைத்து சோதனைக்கு உட்படுத்திய போது அனுமதி பத்திரம் இன்றி மரக்குற்றிகளை ஏற்றி செல்வது கண்டுபிடிக்க பட்டுள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது 53 வயதுடைய ரொக்கத்தன்ன பகுதியினை சேர்ந்த நபர் ஒருவரையும் கைது செய்துள்ளதுடன் லொறியையும் ஹாலிஎல பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்தனர்.
ஹாலிஎல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ருவான் குணதிலக உடனான பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சந்தேக நபரையும் லொறியில் உள்ள மரக்குற்றிகளையும் பதுளை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.
ராமு தனராஜா
