கால்பந்தாட்ட சுபிட்சத்தை நோக்கி (“Road to Football Glory” ): இலங்கை கால்பந்து சம்மேளனத்திற்கான அசைக்க முடியாத உறுதிப்பாட்டை தக்க்ஷிதா அணி வெளிப்படுத்துகிறது.
“கால்பந்தாட்டத்தின் மகிமைக்கான பாதை” (“Road to Football Glory” ): ஊடக மாநாட்டில் ஒரு குறிப்பிடத்தக்க அறிவிப்பில், இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் (FFSL) தேர்தலில் திட்டமிட்டபடி தொடரும் உறுதியான தீர்மானத்தை தக்க்ஷிதா அணி மீண்டும் உறுதி செய்துள்ளது. அணி 13 வேட்பாளர்களை பெருமையுடன் களமிறக்கியுள்ளதுடன், கால்பந்து பங்குதாரர்களை ஒன்றிணைக்கும் முகமாக ஐக்கிய முன்னணியை முன்வைத்துள்ளது.
தலைவர் பதவிக்குரிய வேற்பாளர் தக்க்ஷிதா சுமதிபால: “செப்டம்பர் 30, 2023 அன்று Road to Football Glory தலைவராக நான் பதவியேற்பேன் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இதன்போது குகுளுடு சட்டங்கள், தேர்தல் மற்றும் மேல்முறையீட்டுக் குழுவின் கோரிக்கைகள், அவற்றின் விளக்கங்கள் வெளிப்பட்ட விதம் ஆகியவற்றைக் கருத்தில் கொள்வது மிகவும் முக்கியமான விடயமாகும்;. இந்தத் தேர்தல் தனிப்பட்ட பதவிகளுக்குரியதல்ல, இது பட்டியலின் அடிப்படையில் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உப தலைவர் வேட்பாளர் ரோஹித பெர்னாண்டோ: “நாங்கள் ஒரு ஒருங்கிணைந்த அணியாக நிற்கிறோம், வெற்றியைப் பெறுவதற்கான எங்கள் திறமையில் முழு நம்பிக்கையுடன் இருக்கிறோம். கால்பந்து லீக்குகள் எங்கள் விளையாட்டு எதிர்கொண்ட சவால்கள் மற்றும் அதற்கு யார் பொறுப்பு என்பது பற்றி நன்கு அறியும்.”
செயற்குழு வேட்பாளர் டி. சுதாகர்: “வங்கி பின்னணியில் இருந்து வருவதால், செப்டம்பர் 30 முதல் கால்பந்து ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.”
நிறைவேற்று செயற்குழு பெண் வேட்பாளர் ஹாஷினி ஆரியரத்ன: “முன்னாள் தேசிய வீராங்கனை என்ற முறையில், பெண்கள் கால்பந்து துறையில் உள்ள பின்தங்கிய நிலையினை நான் நன்கு அறிவேன். மகளிர் கால்பந்தை புத்துயிர் பெறச் செய்வதற்கும், அது சரியான பாதையில் செல்வதை உறுதி செய்வதற்கும் விரிவான திட்டத்தை செயல்படுத்துவோம்.”
நிறைவேற்று செயற்குழு வேட்பாளர் யு நிஹால் பெரேரா: “ஒரு சட்டத்தரணி என்ற வகையில், தேர்தல் மற்றும் மேன்முறையீட்டுக் குழுவின் முடிவுகளில் காணப்படும் சார்புநிலை குறித்து நான் கவலைகளை வெளிப்படுத்த வேண்டும், இது மற்றொரு நபருக்கு சாதகமாகத் தோன்றுகிறது.”
ஒரு கூட்டு அறிக்கையில், இலங்கை கால்பந்தாட்டத்தை சீர்திருத்துவதற்கான அவசரத்தை எடுத்துக்காட்டி, தங்களின் திட்டமிட்ட முன்முயற்சிகளுடன் முன்னோக்கிச் செல்வதற்கான உறுதிப்பாட்டை தச்சித அணி வலியுறுத்தியது.
“சுழயன வழ குழழவடியடட புடழசல” மீடியா மாநாடு, தச்சிதா அணிக்கு கால்பந்து பங்குதாரர்களிடம் உரையாடுவதற்கும், விளையாட்டின் மேம்பாட்டிற்கான அவர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பைத் தெரிவிப்பதற்கும் ஒரு தளத்தை வழங்கியது. ஒன்றிணைந்த பார்வையுடனும் உறுதியான அணியுடனும் இலங்கை கால்பந்தாட்டத்தை புதிய சகாப்தத்திற்கு இட்டுச் செல்ல தயாராக உள்ளனர்.
தக்க்ஷிதா அணி பற்றி
தக்க்ஷிதா அணியானது இலங்கை கால்பந்தாட்டத்துறைக்கு புத்துயிர் வழங்கும் முகமாக அர்ப்பணிப்புடன் செயற்படக்கூடிய பலதரப்பட்ட நபர்களை உள்ளடக்கியது. அவர்களின் கூட்டு நோக்கு மற்றும் பணியானது விளையாட்டிற்குள் ஒரு நேர்மறையான மாற்றத்தைக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டமை அதன் வளர்ச்சி, ஒருமைப்பாடு மற்றும் வெற்றியை உறுதி செய்கிறது.

