இன்று மாலை 3.00 மணியளவில் கேகாலை அவிசாவளை பிரதான வீதியில் கன்னந்தொட்ட பகுதியில் வவுனியாவில் இருந்து எம்பிலிப்பிட்டி நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸும் எம்பிலிப்பிட்டியில் இருந்து கேகாலை நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸும் நேருக்கு நேர் மோதியதில் நால்வர் படுகாயங்களுடனும் 11பேர் சிறுகாயங்களுடனும் கரவனல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியாவில் இருந்து எம்பிலிப்பிட்டி நோக்கி புறப்பட்ட பஸ் லொறியொன்றை முந்திச்செல்ல முற்பட்டபோதே இவ்விபத்து நிகழ்ந்ததாக பிரதேசவாசிகள் குறிப்பிட்டனர். விபத்து தொடர்பாக ருவன்வெல்ல பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
(செய்தி- அவிசாவளை நிருபர்)


