தடைசெய்யப்பட்ட சிகரெட்களை விற்பனை செய்த இருவருக்கு 200000 ரூபாய் அபராதம்.
பலாங்கொடை கல்தொட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்தொட்ட பிரதேசத்தில் சட்ட விரோதமாக தடைசெய்யப்பட்ட சிகரெட்களை விற்பனை செய்த
இரு வியாபார நிலையங்களின் உரிமையாளர்களை கல்தொட்ட காவற்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரையும் பலாங்கொடை மேலதிக நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர் படுத்தினர்.
மேற்குறிப்பிட்ட இருவருக்கும் தலாஒரு இலட்சம் ரூபாய் வீதம் இரண்டு இலட்சம் ரூபாய் அபராதம் விதித்தார்.அத்தோடு கடுமையான நிபந்தனைகளின் அடிப்படையில் விடுதலை செய்தார்.
