தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பெருமளவிலான ஊழியர்கள் அரசியல் நியமனங்களின் அடிப்படையில் சேவையில் இணைந்துள்ளதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இப்படி அரசியல் நியமனங்களின் அடிப்படையில் சுமார் 70% பணியாளர்கள் திறமையற்றவர்கள் என அவர் தெரிவித்தார்.
பல பிரிவுகளில் பணி வெற்றிடம் காணப்படுவதாகவும் , சில பிரிவுகளில் பணியாளர்கள் உயர்வாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், புதிய ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்யும் எண்ணமும் இல்லை என அமைச்சர் தெரிவித்தார்.
