இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதற்கு தமது நாடு தொடர்ந்து ஆதரவளிக்கும் எனத் தெரிவித்த ஜப்பான் பாராளுமன்றத்தின் வெளிவிவகார பிரதி அமைச்சர் கொமுரா மசாஹிரோ( Komura Masahiro) , குறுகிய காலத்தில் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி மேலும் முன்னேற்றத்தை அடைந்துகொண்டமைக்காக அரசாங்கத்தைப் பாராட்டினார். அரசாங்கம் மேற்கொண்டுள்ள கட்டமைப்பு சீர்திருத்தங்கள் வெளிநாட்டு முதலீட்டுக்கு சாதகமான சூழலை மேம்படுத்தும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
கடந்த திங்கள் (10.10.2023) பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலில், ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர், இந்து சமுத்திர வலய நாடுகளின் சங்கத்தின் கூட்டத்தில் பங்குபற்றுவதற்காக இலங்கைக்கு விஜயம் செய்த சந்தர்ப்பத்தில் இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பாக இலங்கை தலைவர்களுடன் இணைந்து செயற்பட வாய்ப்பு கிடைத்ததாக தெரிவித்தார். இந்து சமுத்திர வலய நாடுகளின் சங்கத்தின் தலைவராக தனது இரண்டு வருட பதவிக் காலத்தில் இலங்கைக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக அவர் உறுதியளித்தார்.
