பாடசாலை மாணவர்களுக்கான தற்காப்பு கலைகளுள் கராத்தே கலையினை பயிற்றுவிக்கும் முகமாகவும் அவற்றை ஊக்கும் முகமாகவும் ஊவா மாகாணம் பதுளை மாவட்டம் வெலிமட கல்வி வலயத்திற்குட்பட்ட ப/ ஹலகொல்ல தமிழ் மகா வித்தியாலயம் மற்றும்
ப/ கம்பஹா தமிழ் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட கராத்தே பயிற்சி வகுப்பில் பயிலும் மாணாக்களுக்கான தரப்படுத்தல் பரீட்சையும் (Grading Exam) பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் இன்றைய தினம் (14/10)
ப/ ஹலகொல்ல தமிழ் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
மாணவர்களை பயிற்றுவித்த ஆசான் சென்செய். G. தர்ஷன் அவர்களையும் நெறிப்படுத்திய ஆசான் சிகான். K.சிவராஜா அவர்களையும் வாழ்த்துவதோடு வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.






