நாட்டின் பல பகுதிகளிலும் இன்று (23) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்திய, சப்ரகமுவ, ஊவா, தென் மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லி மீற்றர் அளவான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை வௌியிட்டுள்ளது.
மேல் மாகாணம் மற்றும் புத்தளம் மாவட்டத்தின் சில இடங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூரியுள்ளது.
இடியுடன் கூடிய மழையுடன் பலத்த காற்று வீசக்கூடும் எனவும், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களிடம் தெரிவித்துள்ளது.
