Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான இடங்களைப் பெற்றுக்கொடுக்க ஜீவன் தொண்டமான் நடவடிக்கை!

August 10, 2026

கேகாலை பாடசாலையில் புலமைப்பரிசில் வினாத்தாள் தாமதம்: மாணவர்களுக்கு நீதி வழங்க இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்!

August 10, 2026

மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி

August 10, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 04 இந்திய மின்பிடி படகுகள் கடற்படையினரால் கைது
இலங்கை

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 04 இந்திய மின்பிடி படகுகள் கடற்படையினரால் கைது

ThanaBy ThanaDecember 8, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகுகளை விரட்டுவதற்காக இலங்கை கடற்படையினர் 2023 டிசம்பர் 06 ஆம் திகதி மாலை மன்னார் மற்றும் காங்கேசன்துறை கோவிலன் கடற்பரப்பில் மேற்கொண்ட விசேட நடவடிக்கைகளின் போது இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 04 இந்திய மீன்பிடி படகுகளுடன் 21 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்பரப்பை அத்துமீறி வெளிநாட்டு மீன்பிடி படகுகள் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இலங்கை கடற்படையினர் இலங்கை கடற்பரப்பில் ரோந்து பணிகளை அதிகரித்து தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக நுழைந்து, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட பல இந்திய மீன்பிடி படகுகளைக் கண்காணித்த வட மத்திய மற்றும் வடக்கு கடற்படை கட்டளைகளின் கடற்படையினர் 2023 டிசம்பர் 06 ஆம் திகதி மாலை குறித்த கடற்படை கட்டளைகளின் விரைவுத் தாக்குதல் படகுகள் மற்றும் கரையோர ரோந்து படகுகள் மூலம் இந்திய மீன்பிடிப் படகுகளை விரட்டும் சிறப்பு நடவடிக்கையொன்றை மேற்கொன்டுள்ளனர். அப்போது மன்னார் பகுதிக்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஒரு இந்திய மீன்பிடி படகுடன் 08 இந்திய மீனவர்களும் காங்கேசன்துறை கோவிலன் பகுதியிலிருந்து மூன்று இந்திய மீன்பிடி படகுகளுடன் 13 இந்திய மீனவர்களும் இவ்வாறு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 04 இந்திய மீன்பிடி படகுகள் மற்றும் 21 இந்திய மீனவர்கள் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டனர், மேலும் அவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தலைமன்னாரம் மற்றும் யாழ்ப்பாணம் கடற்றொழில் பரிசோதகர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

மேலும், இந்த நடவடிக்கையுடன் 2023 ஆம் ஆண்டில் இதுவரை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் 31 இந்திய மீன்பிடி படகுகளும் 195 இந்திய மீனவர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    கேகாலை பாடசாலையில் புலமைப்பரிசில் வினாத்தாள் தாமதம்: மாணவர்களுக்கு நீதி வழங்க இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்!

    August 10, 2026

    மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி

    August 10, 2026

    ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். 

    August 10, 2026

    கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை: இரு கடைகளுக்கு 3 இலட்சம் ரூபா அபராதம்!

    August 10, 2026
    Editors Picks

    அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான இடங்களைப் பெற்றுக்கொடுக்க ஜீவன் தொண்டமான் நடவடிக்கை!

    August 10, 2026

    கேகாலை பாடசாலையில் புலமைப்பரிசில் வினாத்தாள் தாமதம்: மாணவர்களுக்கு நீதி வழங்க இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்!

    August 10, 2026

    மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி

    August 10, 2026

    ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். 

    August 10, 2026

    அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான இடங்களைப் பெற்றுக்கொடுக்க ஜீவன் தொண்டமான் நடவடிக்கை!

    August 10, 2026

    கேகாலை பாடசாலையில் புலமைப்பரிசில் வினாத்தாள் தாமதம்: மாணவர்களுக்கு நீதி வழங்க இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்!

    August 10, 2026

    மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி

    August 10, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.