10.12.2023
தினம் மகளிர் மற்றும் பெண் பிள்ளைகளுக்கு எதிராக நடைபெறும் அனைத்துவிதமான வன்முறைகளையும் தடுப்பதற்கு அணி தீரளவோம் எனும் கருப்பொருளின் கீழ் நுவரெலியா மாவட்ட செயலகத்தின் மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் சர்வதேச நிகழ்ச்சி இன்று காலை 10 மணிக்கு நுவரெலியா நகரில் நடை பயணம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் அநேக பெண்கள் கலந்து கொண்டனர் இவ் நடை பயணம் நுவரெலியா மாவட்ட செயலகத்தின் முன்னாள் ஆரம்பமாகி நுவரெலியா பிரதான வீதி வழியாக நுவரெலியா தபால் நிலையத்தின் சுற்று வட்டத்தின் ஊடாக மீண்டும் நுவரெலியா மாவட்ட செயலகத்தை வந்தடைந்தார்கள்.
இந்நிகழ்வானது ஒன்பதாம் தேதி மற்றும் பத்தாம் திகதிகளில் நடைபெற்றது. தெளிவூட்டல் நிகழ்ச்சி மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு வைத்தியசாலைக்கு தேவையான சகல பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது. நுவரெலியா மாவட்ட செயலகத்தின் நுவரெலியா மாவட்ட உப அரசாங்க அதிபரின் தலைமையில் நடைபெற உள்ளது.

