ஏறாவூர் மிச்நகர் இல்மா வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றி சித்தி பெற்ற மாணவர்கள், கல்விப் பொதுத்தர சாதாரண தரப்பரீட்சையில் சிறந்த பெறுபேற்றினை பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (21) தேனி கலை இலக்கிய மன்றத்தின் அனுசரணையோடு, சுபைர் முஹம்மது றம்சின் Jp அவர்களின் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் இடம் பெற்றது.
(எம்.எஸ்.எம் றசீன்)
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் நிஹாறா மௌஜுத், கௌரவ அதிதிகளா மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான றிப்கா மற்றும் றமீஸ், உதவிக் கல்விப் பணிப்பாளர் முபாஸ்தீன், சிறப்பு அதிதிகளாக இல்மா வித்தியாலயத்தின் அதிபர் சிறாஜூல் ஆரிபீன், றஹ்மானியா வித்தியாலயத்தின் அதிபர் உவைஸ் அஹமட், இல்மா வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் றிஹான், அந்நூர் செரட்டி நிறுவனத்தின் இணைப்பாளர் நளீம், மிச்நகர் பிரதேசத்தின் கிராம சேவகர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பாடசாலையின் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.
பாடசாலையின் முன்னாள் அதிபர்கள், பரீட்சைக்கு மாணவர்களை சிறந்த முறையில் தயார் படுத்திய ஆசிரியர்கள், சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவ மாணவிகளுக்கு வருகை தந்த அதிதிகளினால் சான்றிதழ்களும், நினைவுச்சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு, பாடசாலை மாணவர்களினால் கலை இலக்கிய நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டது.
இப்பாடசாலையானது கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையில் மாணவர்கள் பெற்றுக் கொண்ட புள்ளிகளின் அடிப்படையில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் முதலாம் இடத்தினை பெற்றுக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
















