Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தின் விசேட அறிக்கை*

August 13, 2026

இங்குருகமுவ மற்றும் ஆக்கரத்தன்னை தோட்டங்களை தனியாருக்கு வழங்கக் கூடாது – பகி பாலசந்திரன் எச்சரிக்கை!

August 13, 2026

மஸ்கெலியா,ஓல்ட்டன் தோட்ட கிங்கோரா பிரிவில் இறந்த நிலையில் சிறுத்தை மீட்பு.

August 13, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மொழித் திறன் பரீட்சையில் தேர்ச்சி பெற்ற 10,000 பேருக்கு ஜப்பானில் தொழில் வாய்ப்பு
இலங்கை

மொழித் திறன் பரீட்சையில் தேர்ச்சி பெற்ற 10,000 பேருக்கு ஜப்பானில் தொழில் வாய்ப்பு

ThanaBy ThanaJanuary 31, 2024No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

புதிய கிராமம், புதிய நாடு, தொழில் முனைவு அரசு என்ற கருத்தின் கீழ், வறுமையில் உள்ள 12 இலட்சம் குடும்பங்களை வலுவூட்ட எதிர்பார்த்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்தார்.

ஜப்பான் மொழித் திறன் பரீட்சையில் சித்தியடைந்த 10,000 பேர் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படவுள்ளதாகவும், மேலும் 100,000 பேருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை இவ்வருடம் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில்  (30) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல்,

இருபது இலட்சம் பயனாளிகளுக்கு அஸ்வெசும என்ற சமூகப் பாதுகாப்பு நிவாரணத்தை வழங்குவதே இந்த ஆண்டு எமது முக்கியப் பணியாகும். ” புதிய கிராமம், புதிய நாடு, தொழில் முனைவு அரசு ” என்ற கருத்தின் கீழ், வறுமையில் உள்ள 12 இலட்சம் குடும்பங்களை வலுவூட்டவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வருடம் அதில் 03 இலட்சம் பேரை வலுவூட்டும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதன்போது, பயனாளிகளுக்கு பணம் வழங்கும் செயல்முறைக்கு அப்பால், எமது முக்கிய நோக்கம் அவர்களை வலுவூட்டுவதாகும். அதற்காக தற்போதுள்ள பொறிமுறையை மாற்றவும் முடிவு செய்துள்ளோம். அந்த வகையில், வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளை வழங்கி வருகின்றோம். ஜப்பான் மொழித் திறன் பரீட்சையில் தேர்ச்சி பெற்ற 10,000 பேரை தொழிலுக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளோம். மேலும் 100,000 பேருக்கு வெளிநாட்டு தொழில்களை வழங்குவதை இலக்காகக் கொண்டுள்ளோம்.

மேலும், பயனாளிகளுக்கு தொழில்முறை பயிற்சிக்கான ஏற்பாடுகளை வழங்க நாங்கள் தயாராக உள்ளோம். மேலும், விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் ஏற்றுமதிப் பயிர்களை பயிரிடவும் ஊக்குவித்து வருகின்றோம். வெளிநாட்டுச் சந்தையை இலக்காக கொண்டு, முக்கியமாக தேயிலை, கறுவா மற்றும் மிளகு உள்ளிட்ட பயிர்கள் மீது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தொழில்முனைவு நிதியம் ஒன்றை ஆரம்பிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் மேம்படுத்தப்பட வேண்டும். அதன்படி, சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் முகாமையாளர்கள் சுமார் 25,000 பேருக்கும் மேற்பட்டோருக்கு அவர்களின் சேவையின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவர்களில் சுமார் 2000 பேருக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் பதவி உயர்வு வழங்கப்படும்.

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தை நலன்புரிப் பணிகளுக்காக மாத்திரம் செயற்படும் நிறுவனமாக இல்லாமல் தொழில் முயற்சியை ஊக்குவிக்கும் நிறுவனமாக மாற்றுவதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நோக்கமாகும். அதேபோன்று, இளைஞர் சமூகத்தை மேலும் தொழில் பயிற்சிக்கு உட்படுத்துவதற்கு சீனாவுடன் மூன்று ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன” என்று சமூக வலுவூட்டுகை இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் மேலும் தெரிவித்தார்

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தின் விசேட அறிக்கை*

    August 13, 2026

    Clean Sri Lanka ஜனாதிபதி செயலணி கூடியது

    August 13, 2026

    இலங்கை – ஜப்பான் நட்புறவுச் சங்கம் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் இடையே சந்திப்பு

    August 13, 2026

    களுத்துறை மாவட்டத்தில் தேயிலை பயிர்ச்செய்கையை அபிவிருத்தி செய்தல் தொடர்பான கலந்துரையாடல்…

    August 13, 2026
    Editors Picks

    பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தின் விசேட அறிக்கை*

    August 13, 2026

    இங்குருகமுவ மற்றும் ஆக்கரத்தன்னை தோட்டங்களை தனியாருக்கு வழங்கக் கூடாது – பகி பாலசந்திரன் எச்சரிக்கை!

    August 13, 2026

    மஸ்கெலியா,ஓல்ட்டன் தோட்ட கிங்கோரா பிரிவில் இறந்த நிலையில் சிறுத்தை மீட்பு.

    August 13, 2026

    Clean Sri Lanka ஜனாதிபதி செயலணி கூடியது

    August 13, 2026

    பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தின் விசேட அறிக்கை*

    August 13, 2026

    இங்குருகமுவ மற்றும் ஆக்கரத்தன்னை தோட்டங்களை தனியாருக்கு வழங்கக் கூடாது – பகி பாலசந்திரன் எச்சரிக்கை!

    August 13, 2026

    மஸ்கெலியா,ஓல்ட்டன் தோட்ட கிங்கோரா பிரிவில் இறந்த நிலையில் சிறுத்தை மீட்பு.

    August 13, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.