முச்சக்கர வண்டியை திருடிச் செல்ல முயன்ற திருடன் விபத்துக்குள்ளாகி பொலிஸாரிடம் சிக்கிய சம்பவம் இரத்தினபுரியில் இன்று முற்பகல் பதிவாகியுள்ளது.
முச்சக்கர வண்டியின் உரிமையாளர் தனது மனைவியை அழைத்துக்கொண்டு வைத்தியசாலைக்கு சென்ற சந்தர்பத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முச்சக்கர வண்டியை நிறுத்தி விட்டு இரத்தினபுரி வைத்தியசாலைக்கு சென்று திரும்பி வந்த போது நிறுத்தப்பட இடத்தில் அது இல்லாததால் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பின்னர் அதனை தேடி அலைந்த போது சிறிது தூரத்தில் முச்சக்கர வண்டி வீதியின் பாதுகாப்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளாகி கிடப்பதை அவர் அவதானித்துள்ளார். முச்சக்கர வண்டியின் உள்ளே சந்தேக நபர் சிக்கி இருந்ததோடு சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.மேலதிக விசாரணைகளை இரத்தினபுரி காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
மொஹமட் அலி
