கொழும்பின் சில பகுதிகளில் நாளை (10) 15 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
சனிக்கிழமை மாலை 05.00 மணி முதல் நீர் விநியோகம் தடைப்படும் என நீர்வள சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
