.
இரத்தினபுரி நவநகர பிரதேசத்தில் நேற்று (11) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஐவர் படுகாயமடைந்த நிலையில் இரத்தினபுரி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதிவேகமாக வந்த மகிழுந்து ஒன்று மூன்று உந்துருளிகளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குருவிட்ட பிரதேசத்தில் இருந்து இரத்தினபுரி நோக்கி பயணித்த மகிழுந்து வேக கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் வந்த உந்துருளிகள் மீது மோதியதில் ஐவர் படுகாயமடைந்த நிலையில் இரத்தினபுரி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒரு சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.மேலதிக விசாரணைகளை இரத்தினபுரி காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
மொஹமட் அலி
