ஏ ஆர் எஸ் இன்டர்நேஷனல் ஆர்கெஸ்ட்ரா வழங்கிய பாடுவோர் பாடலாம் என்ற போட்டி நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி கடந்த 17ஆம் திகதி ஹட்டன் மாநகரில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
கடந்த இரண்டு வருடங்களாக பல்வேறு கட்டங்களாக இடம்பெற்ற இப்போட்டியின் இறுதிப்போட்டியில் 50 பாடக பாடகிகள் பங்குபற்றினர்.
இப்போட்டியின் நடுவராக இசைபுயல் A.R.ரஹ்மானின் சகோதரியான A.R. ரைஹானா கலந்துகொண்டார்.12 மணிநேரம் நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதலாமிடத்தை தினுசிகா என்ற யுவதி பெற்றுக்கொண்டார். இரண்டாம் இடத்தை டிரோசன் பெற்றுக்கொள்ள மூன்றாமிடத்தை சன்ஜய் பெற்றுக்கொண்டார்.
இந்த இசை நிகழ்ச்சி வெற்றிகரமாக இடம்பெற்றமை குறித்த ஊடக சந்திப்பு கொழும்பில் இடம்பெற்றது.அங்கு கருத்துத் தெரிவித்த ஏ ஆர் எஸ் இன்டர்நேஷனல் ஆர்கெஸ்ட்ராவின் தலைவர் ரஷ்மி ரூமி மற்றும் பாடுவோர் பாடலாம் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் பாடகர் சலீம்…
