Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

ஓகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரிக் கொடுப்பனவு எதிர்வரும் 19ஆம் திகதி வைப்பீடு!

August 17, 2026

நுவரெலியா வர்த்தக சங்கம் மிகுந்த உற்சாகத்துடன் தொடங்கப்பட்டது.

August 17, 2026

மத்திய மலைநாட்டில் தொடரும் கனமழை – நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக உயர்வு!

August 17, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் உள்ளக செயற்பாடுகளை டிஜிட்டல் மயப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் ஜீவன் தொண்டமான்
இலங்கை

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் உள்ளக செயற்பாடுகளை டிஜிட்டல் மயப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் ஜீவன் தொண்டமான்

ThanaBy ThanaJuly 11, 2024No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் உள்ளக செயற்பாடுகளை டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கையை 09.07.2024 அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் ஆவண நடவடிக்கைகள் மற்றும் உள்ளக செயற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக டிஜிட்டல் செயற்பாட்டு வலையமைப்பு ஒன்றினை அறிமுகப்படுத்துதல் மற்றும் தேசிய ரீதியில் அந்நடவடிக்கையை மிக வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை, JICA நிறுவனம் மற்றும் Cyclomax International (Pvt) Ltd ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

EDMS (Electronic Document Management System) என அழைக்கப்படும் இந்த டிஜிட்டல் செயற்பாட்டு வலையமைப்பின் ஊடாக தலைமை அலுவலகத்துடன் நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள 800 பிரிவுகளுக்கு மேற்பட்ட செயற்பாட்டு நிலையங்கள் உள்வாங்கப்பட்டுள்ளதுடன், இதுவரை அச்சு ஊடகத்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட உள்ளக நடவடிக்கைகள் யாவும் டிஜிட்டல் முறையில் கடதாசி பயன்பாடின்றி நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் நிமித்தம் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை, JICA மற்றும் Cyclomax International (Pvt) Ltd ஆகிய நிறுவனங்கள் 2023 ஒக்டோபர் மாதத்தில் முத்தரப்பு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது. ஆறு மாத காலப்பகுதியில் உரிய கணினி வலையமைப்பினை தயாரித்து நாடளாவிய ரீதியில் பரந்து விரிந்துள்ள வடிகாலமைப்பு சபையின் சேவை நிலையங்களிலுள்ள 2000 ற்கு மேற்பட்ட ஊழியர்களுக்கு உரிய பயிற்சியை வழங்கி வலையமைப்பினை இயங்கும் நிலைமைக்கு கொண்டு வர முடிந்துள்ளமையே இத்திட்டத்தின் சிறப்பம்சமாகும்.

இவ்வாறு உள்ளக செயற்பாடுகளை டிஜிட்டல் மயப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ ஜீவன் தொண்டமான் அவர்களின் தலைமையில் 2024 ஜூலை மாதம் 09 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பத்தரமுல்லை லக்திய மெதுர நீர் வழங்கல் அமைச்சில் நடைபெற்றது.

இந்த விசேட நிகழ்விற்கு நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஏ.சி.எம். நபீல், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் நிஷாந்த ரணதுங்க மற்றும் JICA நிறுவனத்தின் பிரதான பிரதிநிதி யாமதா டெஸ்டிதுயா (Yamada Tetsduya), Cyclomax International (Pvt) Ltd வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பொது முகாமையாளர் T. பாரதிதாசன் அவர்கள் உட்பட அதிகாரிகள் பலர் பங்குபற்றியதுடன், இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஊடகவியலாளர்கள் பலரும் பங்குபற்றினர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    ஓகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரிக் கொடுப்பனவு எதிர்வரும் 19ஆம் திகதி வைப்பீடு!

    August 17, 2026

    நுவரெலியா வர்த்தக சங்கம் மிகுந்த உற்சாகத்துடன் தொடங்கப்பட்டது.

    August 17, 2026

    இலங்கையின் வட மாகாணத்தின் மிக உயர்ந்த கட்டடத் திட்டத்திற்கு இலங்கை முதலீட்டுச் சபையுடன் ஒப்பந்தம் கைச்சாத்து

    August 17, 2026

    நுவரெலியாவில் படகு கவிழ்ந்து விபத்து – இரு சிறுவர்களை பத்திரமாக மீட்ட கடற்படையினர்

    August 17, 2026
    Editors Picks

    ஓகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரிக் கொடுப்பனவு எதிர்வரும் 19ஆம் திகதி வைப்பீடு!

    August 17, 2026

    நுவரெலியா வர்த்தக சங்கம் மிகுந்த உற்சாகத்துடன் தொடங்கப்பட்டது.

    August 17, 2026

    மத்திய மலைநாட்டில் தொடரும் கனமழை – நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக உயர்வு!

    August 17, 2026

    இலங்கையின் வட மாகாணத்தின் மிக உயர்ந்த கட்டடத் திட்டத்திற்கு இலங்கை முதலீட்டுச் சபையுடன் ஒப்பந்தம் கைச்சாத்து

    August 17, 2026

    ஓகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரிக் கொடுப்பனவு எதிர்வரும் 19ஆம் திகதி வைப்பீடு!

    August 17, 2026

    நுவரெலியா வர்த்தக சங்கம் மிகுந்த உற்சாகத்துடன் தொடங்கப்பட்டது.

    August 17, 2026

    மத்திய மலைநாட்டில் தொடரும் கனமழை – நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக உயர்வு!

    August 17, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.