முன்னாள் இராணுவ வீரர் ஒருவரின் மனைவியை பணம் கேட்டு தாக்கிய குற்றச்சாட்டில் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெஹியதகண்டிய இராணுவ முகாமில் கடமையாற்றும் 37 வயதுடைய இராணுவ சிப்பாயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
.தாக்குதலுக்கு உள்ளான முன்னாள் இராணுவ வீரரின் மனைவி கணவரின் மரணத்தின் பின்னர் சந்தேக நபருடன் தகாத உறவை பேணி வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தநிலையில், சந்தேகநபர் பணம் கேட்டு தினமும் முன்னாள் இராணுவ வீரரின் மனைவியை தாக்கி துன்புறுத்தி வருவது பொலிஸாரின் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.
