எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கவனம் செலுத்தும் வகையில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் அரசியல் குழுக் கூட்டம் எதிர்வரும் 2ஆம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளது என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் lதலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
உத்தேச ஐக்கியமக்கள் கூட்டணியில் சட்டரீதியாக இணைவது, அதனுடன் புரிந்துணர்வை ஏற்படுத்துவது போன்ற விடயங்கள் தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளது. அத்துடன் ஏலவே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஏற்படுத்திக் கொண்டுள்ள உடன்படிக்கையின் உள்ளடக்கங்கள் குறித்தும் அவதானம் செலுத்தப்படவுள்ளது எனவும் தமிழ் முற்போக்குக் கூட்டணி வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.