பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரவகெட்டிய பிரதேசத்தில் பாதுகாப்பற்ற கால்வாயிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்று இரவு (28/07) மீட்கப்பட்டுள்ளது.
அவிசாவளை பிரதேசத்தில் இருந்து தமது உறவினர் ஒருவரின் வீட்டிற்கு வருகை தந்த 72 வயதுடைய (வாசுதேவன்) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பலாங்கொடை திடிர் மரண பரிசோதகர் சான்த ஜயசேகர தெரிவித்தார்.
சுமார் மூன்று அடி ஆழமான கால்வாயில் விழுந்ததால் இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பிரேத பரிசோதனைக்காக குறித்த நபரின் உடல் பலாங்கொடை வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை பலாங்கொடை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
