இதுவரை மேலைத்தேய வைத்தியர்களுக்கு மாத்திரம் வழங்கப்பட்டு வந்த மேலதிக சேவை கொடுப்பனவை, அரச ஆயுர்வேத வைத்தியர்களுக்கும் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்தார்.
18 வருடங்களுக்கும் மேலாக ஆயுர்வேத வைத்தியர்கள் பல சந்தர்ப்பங்களில் அந்தக் கோரிக்கையை முன்வைத்து வந்ததை நினைவுகூர்ந்த இராஜாங்க அமைச்சர், அந்தக் கோரிக்கையை நிறைவேற்ற அனுமதியளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி இதனைத் தெரிவித்தார்.
