Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கபரகல மக்களுக்கு சொந்த வீடுகள் மட்டுமல்ல தலா 175,000 ரூபாய் பெறுமதியான பொருட்களும் கையளிக்கப்பட்டன

August 25, 2026

மலையக மக்களுக்கு மாடி வீடுகள் ஒரு போதும் தீர்வல்ல: வாழ்வதற்கான காணி, வாழ்வாதாரக் காணி, சிறுதோட்ட உடமையாளர் என்ற கோரிக்கை அங்கீகரிக்கப்பட்ட வேண்டும்

August 24, 2026

முச்சக்கர வண்டித் தொழிலுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த நடவடிக்கை – பிரதி அமைச்சர்

August 23, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிப்பதற்குரிய கண்டியில் அரசியல் சூழ்ச்சிகள் நடக்கின்றன
இலங்கை

தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிப்பதற்குரிய கண்டியில் அரசியல் சூழ்ச்சிகள் நடக்கின்றன

ThanaBy ThanaOctober 25, 2024No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

(க.கிஷாந்தன்)

பாராளுமன்ற பிரதிநிதித்துவமென்பது, அரசியல் வாதிகளுக்கு மக்களால் வழங்கப்படும் உயர் பதவியாகும். அது தனிநபருக்குரிய சொத்தோ அல்லது குடும்பத்துக்குரிய சொத்தே கிடையாது. எனவே, அந்த உயரிய பதவியை இம்முறை எனக்கு வழங்குவதற்கு கண்டி மாவட்ட மக்கள் தீர்மானித்துவிட்டனர் – என்று ஐக்கிய மக்கள் கூட்டணியின் கண்டி மாவட்ட வேட்பாளர் பாரத் அருள்சாமி தெரிவித்தார்.

பொதுத்தேர்தலுக்கான தேர்தல் பிரசாரத்தை சர்வமத வழிபாடுகளுடன் பாரத் அருள்சாமி  (24.10.2024) இன்று ஆரம்பித்தார்.

அதில் முதலாவதாக கண்டி கட்டுக்கலை ஸ்ரீ செல்வ விநாயக ஆலயத்திற்கு சென்று விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுப்பட்டார்.

இவருடன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட அமைப்பாளர் விஷ்வா, செயற்குழு உறுப்பினர்களான குலேந்திரன், கலாதாரன், உமா மகேஸ்வரி, கிருஷ்னா விஜேந்திரன், சேகர் என பலரும் கலந்துக் கொண்டனர்.

வழிபாடுகளின் பின் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு,

‘ தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில், ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தின்கீழ் பொதுத்தேர்தலில் இம்முறை கண்டி மாவட்டத்தில் போட்டியிடுகின்றேன். அதற்கான பிரசாரத்தை இன்று இறையாசியுடன் வெற்றிகரமாக ஆரம்பித்துள்ளேன்.

கண்டி மாவட்டத்தில் தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவதற்குரிய விதையை 2010 ஆம் ஆண்டு எமது தலைவர் மனோ கணேசன் விதைத்தார். அந்த விதைமூலம் 2015 இல் அறுவடை கிடைத்தது. ஆனால் இன்று தமிழ்ப் பிரதிநிதித்துவம் சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளது.

எனவேதான் கண்டி மாவட்டத்துக்குரிய தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க தலைவர் மனோ கணேசனின் நேரடி வழிகாட்டலுடன் தேர்தலில் போட்டியிடுகின்றேன். நிச்சயம் மக்கள் ஆணை கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிப்பதற்குரிய கண்டியில் அரசியல் சூழ்ச்சிகள் நடக்கின்றன. அந்த சூழ்ச்சிகளையெல்லாம் முறியடித்து நிச்சயம் நாம் வெற்றிபெறுவோம்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். இது நல்ல விடயம். அவ்வாறு நடந்தால் நாடாளுமன்ற ஆட்சி முறைமை உருவாக்கப்படும். முழு அதிகாரமும் நாடாளுமன்றம் வசம் இருக்கும். எனவே, எமது கண்டி மண்ணுக்கு தமிழ்ப் பிரதிநிதித்துவம் காலத்தின் கட்டாயமாக அமையும். தமிழ் மக்களின் ஏகோபித்த பிரதிநிதியாக மக்கள் என்னை பாராளுமன்றம் அனுப்பி வைப்பார்கள்.

பாராளுமன்ற பிரதிநிதித்துவமென்பது மக்கள் எமக்கு வழங்கும் பதவி. அது தனிநபருக்குரிய சொத்து அல்ல. அந்த பதவியை இம்முறை எனக்கு வழங்குவதற்கு கண்டி மாவட்ட மக்கள் தீர்மானித்துவிட்டனர். தமிழ் மக்களின் பிரதிநிதியாக மட்டுமல்ல கண்டியில் வாழும் அனைத்து மக்களினதும் குரலாக நான் ஒலிப்பேன்.

இலங்கை ஜனநாயக நாடு. எவரும் தேர்தலில் போட்டியிடலாம். அது அவர்களின் உரிமை. ஆனால் சிலர் சுயநல அரசியலுக்காக போட்டியிடுகின்றனர். மேலும் சிலர் வாக்குகளை சிதறடிப்பதற்காக போட்டியிடுகின்றனர். எனவே, மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.  ஐக்கிய மக்கள் கூட்டணியின் தமிழ் வேட்பாளரான என்னை வெற்றிபெறவைப்பதில் மக்கள் உறுதியாக உள்ளனர்.

Photo (2).jpg

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    முச்சக்கர வண்டித் தொழிலுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த நடவடிக்கை – பிரதி அமைச்சர்

    August 23, 2026

    நுவரெலியாவில் சுற்றுலா பேருந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு

    August 23, 2026

    மகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை!

    August 22, 2026

    இலஞ்சம் பெற்ற இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது

    August 21, 2026
    Editors Picks

    கபரகல மக்களுக்கு சொந்த வீடுகள் மட்டுமல்ல தலா 175,000 ரூபாய் பெறுமதியான பொருட்களும் கையளிக்கப்பட்டன

    August 25, 2026

    மலையக மக்களுக்கு மாடி வீடுகள் ஒரு போதும் தீர்வல்ல: வாழ்வதற்கான காணி, வாழ்வாதாரக் காணி, சிறுதோட்ட உடமையாளர் என்ற கோரிக்கை அங்கீகரிக்கப்பட்ட வேண்டும்

    August 24, 2026

    முச்சக்கர வண்டித் தொழிலுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த நடவடிக்கை – பிரதி அமைச்சர்

    August 23, 2026

    நுவரெலியாவில் சுற்றுலா பேருந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு

    August 23, 2026

    கபரகல மக்களுக்கு சொந்த வீடுகள் மட்டுமல்ல தலா 175,000 ரூபாய் பெறுமதியான பொருட்களும் கையளிக்கப்பட்டன

    August 25, 2026

    மலையக மக்களுக்கு மாடி வீடுகள் ஒரு போதும் தீர்வல்ல: வாழ்வதற்கான காணி, வாழ்வாதாரக் காணி, சிறுதோட்ட உடமையாளர் என்ற கோரிக்கை அங்கீகரிக்கப்பட்ட வேண்டும்

    August 24, 2026

    முச்சக்கர வண்டித் தொழிலுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த நடவடிக்கை – பிரதி அமைச்சர்

    August 23, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.