கொழும்பு கோட்டையிலிருந்து தலைமன்னார் வரையிலான புகையிரத சேவை (12.11.2024) மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பிரதி பொதுமுகாமையாளர் (போக்குவரத்து) அறிவித்துள்ளார்.
மஹவ மற்றும் அநுராதபுரம் வரையிலான புகையிரத வீதி அபிவிருத்தி காரணமாக தற்போது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருக்கும் தலைமன்னார் புகையிரத சேவை 2024.11.12 ஆம் திகதியிலிருந்து மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
அதனடிப்படையில் 2024.11.12ம் திகதியிலிருந்து கொழும்பு கோட்டை மற்றும் தலைமன்னார் இடையிலான புகையிரத சேவையானது பின்வரும் வகையில் அமையவுள்ளது.
இலக்கம் 5003 – கொழும்பு கோட்டையிலிருந்து – தலைமன்னார்
- கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படல் பி.ப. 16.15 – தலைமன்னாரினை அடைதல் பி.ப. 22.15 (2024.11.12ம் திகதியிலிருந்து)
இலக்கம் 5004 தலைமன்னாரிலிருந்து – கொழும்பு கோட்டை
- தலைமன்னாரிலிருந்து புறப்படல் மு.ப. 04.15 கொழும்பு கோட்டையினை அடைதல் மு.ப. 10.15 (2024.11.13ம் திகதியிலிருந்து)
இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தினால் (11.11.2024) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

