சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட மண்சரிவின் காரணமாக தமது வீடுகளை இழந்து, சொந்த இருப்பிடங்களை விட்டு வெளியேற்றப்பட்டுள்ள, கந்தப்பளை சமர்ஹில் கோர்ட்லொட்ஜ் (Court lodge) தோட்டத்திலுள்ள 35 குடும்பங்களைச் சேர்ந்த 184 பேருக்கு மலையக ஜனநாயக முன்னணி தேவயான உலர் உணவு பொதிகள் ,மருந்து பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களையும் நேற்று வழங்கியது.
மலையக ஜனநாயக முன்னணி 2024 இலங்கை பாராளுமன்ற பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் சுயேட்சை குழு 11 றில் தாயக்கட்டை சின்னத்தில் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
