இலங்கையில் ஏற்பட்டுள்ள நாட்டரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வாக அரிசியை இறக்குமதி செய்வதற்கு தாங்கள் தயாராக உள்ளதாக இறக்குமதியாளர்கள் அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளனர்.
இது தொடர்பில் அண்மையில் வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவுடன் (Wasantha Samarasinghe) இறக்குமதியாளர்கள் கலந்துரையாடல் ஒன்றையும் நடத்தியிருந்தனர்.
