Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

இன, மத மோதல்களுக்கு மீண்டும் இடமில்லை: தேசிய மீலாதுன் விழாவில் ஜனாதிபதி அநுர அறிவிப்பு

August 27, 2026

சமூக ஊடகங்களில் சிறுவர், பெண்களின் புகைப்படங்கள் விற்பனை: அமைச்சு அவசர எச்சரிக்கை

August 27, 2026

மருதானையில் சட்டவிரோத மருந்தகம் முற்றுகை: அரச வைத்தியசாலை மருந்துகள் மீட்பு

August 27, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » இந்திய மீன்பிடி படகொன்றுடன் 18 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது
இலங்கை

இந்திய மீன்பிடி படகொன்றுடன் 18 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது

ThanaBy ThanaDecember 5, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

இலங்கை கடற்படையினர் 2024 டிசம்பர் 02 ஆம் திகதி யாழ்ப்பாணம், வெத்தலக்கேணிக்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் மேற்கொண்டுள்ள விசேட நடவடிக்கையின் போது, இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்றுடன் (01) பதினெட்டு (18) இந்திய மீனவர்கள் இந்திய – இலங்கை சர்வதேச கடற்பரப்பை கடந்து இலங்கையை நோக்கி சுமார் 30 கடல் மைல் தொலைவில் இருந்தபோது, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

வெளிநாட்டு மீன்பிடிப் படகுகள் இந்நாட்டு கடற்பகுதியில் மேற்கொள்கின்ற சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுக்கவும், உள்ளூர் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, 2024 டிசம்பர் மாதம் 02 ஆம் திகதி இரவு, இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட பல இந்திய மீன்பிடிப் படகுகளைக் கண்டறிந்த வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் குறித்த மீன்பிடிப் படகுகளை வெளியேற்றுவதற்கான சிறப்பு நடவடிக்கையொன்றை குறித்த கட்டளையின் கடற்படை துரித தாக்குதல் படகுகள் மூலம் மேற்கொண்டுள்ளனர். அங்கு யாழ்ப்பாணம், வெத்தலக்கேணிக்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்றுடன் பதினெட்டு (18) இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இந்த நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்ட இந்திய மீன்பிடி படகு மற்றும் பதினெட்டு (18) இந்திய மீனவர்கள் காங்கேசந்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் பிராந்திய பணிப்பாளர் வடக்கு வலய அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.

மேலும், இந்த நடவடிக்கையுடன் 2024 ஆம் ஆண்டில் இது வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மூலம், இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட அறுபத்தாறு (66) இந்திய மீன்பிடிக் படகுகள் மற்றும் ஐந்நூற்று பதினைந்து (515) இந்திய மீனவர்கள், கடற்படையினரால் மற்றும் கடலோர காவல்படையினரால் கைது செய்து மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    இன, மத மோதல்களுக்கு மீண்டும் இடமில்லை: தேசிய மீலாதுன் விழாவில் ஜனாதிபதி அநுர அறிவிப்பு

    August 27, 2026

    சமூக ஊடகங்களில் சிறுவர், பெண்களின் புகைப்படங்கள் விற்பனை: அமைச்சு அவசர எச்சரிக்கை

    August 27, 2026

    மருதானையில் சட்டவிரோத மருந்தகம் முற்றுகை: அரச வைத்தியசாலை மருந்துகள் மீட்பு

    August 27, 2026

    இலங்கைத் தூதரகத்தின் அவசர எச்சரிக்கை: நேபாளத்தில் உள்ள இலங்கையர்களுக்கான அறிவுறுத்தல்

    August 27, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.