மலையகம் 200க்கு அப்பால் தமிழ் மற்றும் ஆங்கில நூல்கள் வெளியீட்டு நிகழ்வு கொழும்பு தமிழ் சங்கத்தில் நேற்று பிற்பகல் 3.30மணிக்கு இடம்பெற்றது .,இர.சிவலிங்கம் ஞாபகார்த்த குழு குறித்த நிகழ்வை ஒழுங்கு செய்திருந்தது,நிகழ்வுக்கு அதன் தலைவர் எம் வாமதேவன் தலைமைதாங்க ,பிரதம அதிதிகளாக மகளீர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சசர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் மற்றும் பெருந்தோட்டம் சமூகம் கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோரும் கலந்து சிறப்பிக்க ,மலையகத்தின் மூத்த எழுத்தாளர்கள் ,பேராசிரியர்கள் ,இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
