பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களின் வேண்டுகோளுக்கி னங்க ஐயப்ப சுவாமி தரிசனத்திற்காக இந்தியா செல்லும் இந்து பக்தர்களுக்கு எதிர் காலத்தில் ஒரு அங்கீகாரத்தை பெற்றுக் கொடுப்பதற்கும் அது ஒரு புனித யாத்திரையாக மேற்கொள்ளுவது தொடர்பாக இன்றைய தினம் புத்தசாசன சமய மற்றும் கலாச்சார அலுவலர்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும் சுனில் செனவி அவர்களுக்கும் பிரதி அமைச்சருக்குமிடையிலான கலந்துரையாடல் புத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சில் இடம்பெற்றிருந்தது.
இக்கலந்துரையாலின் போது இந்து சமய கலாசார அலுவலர்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் உட்பட உத்தியோகஸ்தர்களும் இரண்டு அமைச்சிகளின் செயலாளர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.
இலங்கையில் இருந்து அதிகமான ஐயப்ப பக்தர்கள் வழிபாட்டுக்காக இந்தியா செல்கின்றார்கள், இவ் யாத்திரையினை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்துவதன் சம்பந்தமாக ஆலோசனைகளை அமைச்சர் அவர்கள் வழங்கி இருந்ததோடு , இது சம்பந்தமாக
சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு இந்து சமய கலாச்சார அலுவலகத்தின் பணிப்பாளர் உட்பட அதிகாரிகளுக்கு பணிபுரை
விடுக்கப்பட்டது.
எதிர்காலத்திலே இந்தியா செல்லும் இந்து பக்தர்களுக்கு இதன் மூலம் அங்கீகாரம் கிடைப்பதோடு
அது ஒரு புனித யாத்திரையாக கௌரவ பெரும் என பிரதி அமைச்சர் தெரிவித்திருந்தார்.
