Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

யோஷித ராஜபக்ஷ கைது

June 17, 2026

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பசுமலை பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது

June 17, 2026

தீவிரமடையும் டெங்கு- கொட்டகலையில் 20ஆம் திகதி விசேட பரிசோதனை முன்னெடுப்பு!

June 17, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » சன்ஷைன் அறக்கட்டளை, சமூகங்களுக்கான பாதுகாப்பான நீர் பயன்பாட்டை விரிவுபடுத்துகிறது
இலங்கை

சன்ஷைன் அறக்கட்டளை, சமூகங்களுக்கான பாதுகாப்பான நீர் பயன்பாட்டை விரிவுபடுத்துகிறது

ThanaBy ThanaSeptember 26, 2025No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

நற்காரியங்களின் 23வது RO நிலையத்திற்கான சன்ஷைன் அறக்கட்டளை, சமூகங்களுக்கான
பாதுகாப்பான நீர் பயன்பாட்டை விரிவுபடுத்துகிறது
2025 செப்டம்பர் 03: நற்காரியங்களுக்கான சன்ஷைன் அறக்கட்டளை, சன்ஷைன் ஹோல்டிங்ஸ்பில்சி கூட்டு நிறுவன சமூக பொறுப்பு பிரிவானது அதன் 23வது ரிவர்ஸ் ஒஸ்மோஸிஸ் நீர் சுத்திகரிப்பு நிலையத்தினை சிலாபம், ஹெலம்பவட்டவான ஸ்ரீ சத்தாநந்த மகா வித்தியாலயத்தில் அங்குரார்ப்பணம் செய்தது.
பாடசாலை மற்றும் அதனை சூழவுள்ள சமூகத்தின் பயன்பாட்டிற்கென கையளிக்கப்பட்ட குறித்தபுதிய நிலையத்தின் ஊடாக 1,300 மாணவர்களும் 2,000 க்கும் மேற்ப்பட்ட பிரதேச மக்களும்முகம்கொடுத்த நீர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த அத்தியாவசியத் தேவையைபூர்த்தி செய்வது, சுகாதாரமான வாழ்வியலுக்கு ஒத்துழைப்பு வழங்கும் முயற்சியாகஅமையப்பெற்றுள்ளதுடன், சிறுநீரக நோய் போன்ற நீரினால் பரவும் நோய்களை கட்டுப்படுத்த
உதவுகின்றது. அத்துடன் பணம் செலுத்தி நீரைப் பெற்றுக்கொள்ளல், பாதுகாப்பற்ற நீரை
அருந்துவதால் ஏற்படக்கூடிய நோய்களுக்கான சிகிச்சைகளுக்கு அதிக பணத்தை செலவிடுதல்
போன்ற நிதிச் சுமையினை குறைக்கின்றது.
"எமது 23வது RO நிலையம், சிலாபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளமையானது சமூக
நல்வாழ்விற்கான சன்ஷைன் ஹோல்டிங்ஸின் நீண்டகால பொறுப்பை பிரதிபலிக்கிறது." என
சன்ஷைன் ஹோல்டிங்ஸ் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஷியாம் சதாசிவம்
தெரிவித்தார். "தியரசனவின் ஒவ்வொரு முயற்சிகளும் பாதுகாப்பான குடிநீரை வழங்குவதுடன்,
சமூகத்தில் சுகாதாரம், மீள்தன்மை மற்றும் வளர்ச்சியைப் உறுதிசெய்கிறது. தேசத்தை
கட்டியெழுப்புவதிலும் ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்குவதிலும் எமக்கான பங்கினை
மீள உறுதிசெய்கிறது."
பாதுகாப்பான குடிநீரை பெற்றுக்கொடுப்பதில் SFG யின் அர்ப்பணிப்புமிக்க சமூக நல முயற்சியான
தியரசன ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இன்று வரை சுமார் 35,000க்கும் அதிகமான
இலங்கையர்களுக்கு நீர் விநியோகத்தை பெற்றுக்கொடுத்துள்ளது. வடக்கு, வடமத்திய,
வடமேற்கு, தெற்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களின் பல பிராந்தியங்களில் 23 RO
நிலையங்கள்; அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நிலையமும் நாளாந்தம் 5000 முதல் 10,000 லீற்றர்
வரையான நீரைப் பெற்றுக்கொடுக்கும் திறன் கொண்டது. இத்திட்டமானது பாடசாலைகள்
மற்றும் கிராமங்களுக்கு தேவையான பாதுகாப்பான நீரைப் பெற்றுக்கொடுக்கின்றது. குறிப்பாக,
பாதுகாப்பற்ற நீரினால் உயர் இடர்களை எதிர்கொள்ளும் பிள்ளைகள் மற்றும் குடும்பங்களுக்கு
இத்திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.
குறித்த முயற்சியானது, ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்தி இலக்குகளில் (SDG – 6)
ஒன்றான சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரம் உட்பட பாதுகாப்பான நீருக்கான உலகளாவிய
முயற்சியில் இலங்கையின் முன்னேற்றத்திற்கு நேரடியாக ஒத்துழைப்பு வழங்குகிறது.
சன்ஷைன் ஹோல்டிங்ஸின் CSR முயற்சிகளை ஒருங்கிணைக்கும் நோக்கில் இரண்டு முக்கிய
தூண்களின் கீழ் (கல்வி மற்றும் சுகாதாரம்) 2017ம் ஆண்டு நற்காரியங்களுக்கான சன்ஷைன்
அறக்கட்டளை நிறுவப்பட்டது. தியரசன திட்டங்களின் ஊடாக, அறக்கட்டளையானது

தொடர்ச்சியாக இது போன்ற அத்தியாவசியமான தேவைகளை நிவர்த்தி செய்வதுடன், சமூக
சுகாதாரம், கல்வி மற்றும் நீண்டகால தேசிய அபிவிருத்திக்கு பங்களிப்பு வழங்குகின்றது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் அமைதி ஆர்ப்பாட்டம்

    June 17, 2026

    நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை: கல்வி அமைச்சு அதிரடி உத்தரவு!

    June 16, 2026

    Rebuilding Sri Lanka ஜனாதிபதி செயலணி கூடியது

    June 16, 2026

    உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை: தன்னை கைது செய்வதை தடுக்குமாறு கோரி கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றில் மனு!

    June 16, 2026
    Editors Picks

    யோஷித ராஜபக்ஷ கைது

    June 17, 2026

    அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பசுமலை பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது

    June 17, 2026

    தீவிரமடையும் டெங்கு- கொட்டகலையில் 20ஆம் திகதி விசேட பரிசோதனை முன்னெடுப்பு!

    June 17, 2026

    கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் அமைதி ஆர்ப்பாட்டம்

    June 17, 2026

    யோஷித ராஜபக்ஷ கைது

    June 17, 2026

    அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பசுமலை பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது

    June 17, 2026

    தீவிரமடையும் டெங்கு- கொட்டகலையில் 20ஆம் திகதி விசேட பரிசோதனை முன்னெடுப்பு!

    June 17, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.