Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

யோஷித ராஜபக்ஷ கைது

June 17, 2026

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பசுமலை பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது

June 17, 2026

தீவிரமடையும் டெங்கு- கொட்டகலையில் 20ஆம் திகதி விசேட பரிசோதனை முன்னெடுப்பு!

June 17, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » தலவாக்கலை பிளிகண்டாமலை தனியார் தோட்ட மக்களுக்கு நடப்பது என்ன ..?
இலங்கை

தலவாக்கலை பிளிகண்டாமலை தனியார் தோட்ட மக்களுக்கு நடப்பது என்ன ..?

ThanaBy ThanaNovember 21, 2025No Comments3 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

பல தசாப்தங்களாக குடியிருந்த வீட்டையும் உறையும் விட்டு வேறு இடத்திற்கு யாரால் செல்ல முடியும்? ஆனால் தோட்டத் தொழிலாளர்கள் மாத்திரம் இவ்வாறு துரத்தப்படுவது எப்போது நிறுத்தப்படும்?

மலையகத்தை பொருத்தவரையில் சில தேயிலை தோட்டங்களை தனிப்பட்ட நபர்கள் தம் வசம் வைத்துக் கொண்டு தொழிலாளர்களை அடிமை போல் நடத்தும் அடக்குமுறை இன்று வரை சில இடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. 1948 ஆம் ஆண்டு இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த போதிலும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இன்றும் அடிமைகளாக நடத்தப்படுகின்றனர்.

தலவாக்கலை பிரதேச செயலாளர் நிர்வாகத்தின் உட்பட்ட பிளிகண்டாமலை (C. W. Coom) கூட்டமானது தனியார் ஒருவருக்கு சொந்தமானதாக இருந்து வந்துள்ளது. பிறகு அவர் குறித்த தோட்டத்தை மேலும் சிலருக்கு பகுதிகளாக பிரித்து விற்பனை செய்து உள்ளார். அதன் அடிப்படையில் இத்தோட்டத்தில் கடந்த ஆறு தசாப்த காலமாக 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இருந்த போதிலும் இந்த மக்களுக்கு இந்த குடியிருப்புகள் சொந்தமாக வில்லை. அவர்கள் தற்போது வசிக்கும் சுமார் 15 ஏக்கர் காணியையும் வேறொரு தனிநபர் சொந்தமாக வாங்கியுள்ளார்.

இறுதியாக இந்த தோட்டத்தை வாங்கியவர் தோட்ட மக்களின் நலன் கருதி பல்வேறு படங்களை செய்து தருவதாக ஆரம்ப காலத்தில் உறுதிமொழி வழங்கிய போதிலும் நாள் செல்ல செல்ல அவரும் சாதாரண வர்த்தகர் போலவே நடந்து கொள்வதாக மக்கள் தெரிவித்தனர்.

குறிப்பாக இத்தோட்டத்திற்கு செல்லும் பாதை மிக மோசமான நிலையில் போக்குவரத்திற்கு பயன்படுத்த முடியாத அளவில் இருந்து வந்த போதிலும் தற்போதைய அரசாங்கம் சுமார் 8.6 கோடி ரூபா செலவில் காப்பட் இட்டு மிகச்சிறந்த போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் குறித்த தோட்ட எல்லைக்குள் பாதையை போட வேண்டாம் என தற்போதைய உரிமையாளர் விதி அபிவிருத்தி அதிகார சபைக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர் இதனால் குறித்த வீதி புனரமைப்பு தோட்டத்தின் எல்லை வரை மாத்திரமே இடம்பெற்றுள்ளது.

மேலும் இத்தோட்டத்தில் வசிக்கும் 45 குடும்பங்கள் தமது வருமானத்திற்காக தத்தமது வீடுகளுக்கு அருகாமையில் இருக்கும் காணிகளில் விவசாயங்களை செய்து வந்தனர். ஆனால் அதனையும் தொடர்ந்து செய்வதற்கு சில முட்டுக்கட்டைகளை தற்போதைய உரிமையாளர் விதித்துள்ளதாக குற்றம் சுமத்தப்படுகிறது. தமது பயிற்சிக்காக வித் ஓட்டத்தில் பெரிய குளம் ஒன்றை அமைப்பதற்கான வேலைகளை தற்போதைய உரிமையாளர் செய்தி வந்த நிலையில் . அதிருப்தி அடைந்த தோட்டமக்கள் தமது வாழ்விடங்களை தமக்கே சொந்தமாக்கி தருமாறு கோரி மனித உரிமை ஆணைக்குழு இடம் புகார் செய்து அதன் பின்னர் நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றிணையும் தற்போதைய உரிமையாளருக்கு எதிராக தாக்கல் செய்திருந்தனர்.

அதன் அடிப்படையில் இன்றைய தினம் (கடந்த வியாழன்) குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்தபோது, வழக்கு முடியும் வரை பிளிகண்டாமலை தோட்ட எல்லைக்குள் எந்தவிதமான செயற்பாடுகளையும் தொடர முடியாது என்ற இடைக்கால தடை உத்தரவை மாவட்ட நீதிமன்ற நீதவான் விதித்துள்ளதாக சட்டத்தரணி தெரிவித்தார். இந்த தீர்ப்பு தொடர்பான பிஸ்கால் அறிவித்தல் நாளைய தினம் (வெள்ளி) தோட்ட உரிமையாளருக்கும் பொது மக்களுக்கும் அறிவிக்கப்படும் என்றும் சட்டத்தரணி கூறினார். இதன் பிரகாரம் தோட்ட மக்கள் வளமை போல் தமது செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என்றும் அரசாங்கத்தின் வேலை திட்டங்களும் தடையின்றி முன்னெடுப்பதற்கான வழிகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த பல தசாப்த காலமாக தோட்ட மக்கள் சொல்லனால் துயரங்களை அனுபவித்து உயர்கல்வியை தொடர முடியாத நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நாட்டின் முதுகெலும்பாக திகழும் தோட்டத் தொழிலாளர்களுக்கு உரிய வீடு கானி எப்போது சொந்தமாக்கப்படும் என்ற கேள்விக்குறியோடு பிளிகண்டாமலை மக்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

குறித்த வழக்கு தொடர்ச்சியாக விசாரிக்கப்பட்டு இத்தோட்ட மக்களுக்கான விடிவை பெற்றுக் கொடுப்பதற்கு சட்டத்தரணிகள் மாத்திரம் அல்லாது சமூக ஆர்வலர்களும் செயற்பட வேண்டுமென பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

இது இவ்வாறு இருக்க, நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை மீறி குறிப்பிட்ட தோட்டத்தின் உரிமையாளர் தனது ஊழியர்களைக் கொண்டு தொடர்ந்து தமது பணிகளை செய்து வருவதாகவும் அது தொடர்பான முறைப்பாடும் தலவாக்கலை காவல் நிலையத்தில் செய்யப்பட்டுள்ளதாக தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    யோஷித ராஜபக்ஷ கைது

    June 17, 2026

    அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பசுமலை பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது

    June 17, 2026

    தீவிரமடையும் டெங்கு- கொட்டகலையில் 20ஆம் திகதி விசேட பரிசோதனை முன்னெடுப்பு!

    June 17, 2026

    கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் அமைதி ஆர்ப்பாட்டம்

    June 17, 2026
    Editors Picks

    யோஷித ராஜபக்ஷ கைது

    June 17, 2026

    அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பசுமலை பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது

    June 17, 2026

    தீவிரமடையும் டெங்கு- கொட்டகலையில் 20ஆம் திகதி விசேட பரிசோதனை முன்னெடுப்பு!

    June 17, 2026

    கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் அமைதி ஆர்ப்பாட்டம்

    June 17, 2026

    யோஷித ராஜபக்ஷ கைது

    June 17, 2026

    அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பசுமலை பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது

    June 17, 2026

    தீவிரமடையும் டெங்கு- கொட்டகலையில் 20ஆம் திகதி விசேட பரிசோதனை முன்னெடுப்பு!

    June 17, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.