Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

பது/ எல்வட்டன் தமிழ் வித்தியாலயம் இரண்டு தேசிய விருதுகளை வரலாற்றின் முதன்முறையாக பெற்றுள்ளது.

October 16, 2026

வட்டவளையில் லொறியும் ஜீப்பும் நேருக்கு நேர் மோதி விபத்து – ஒருவர் காயம்!

October 16, 2026

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் ஜானகி சிறிவர்தன ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு!

October 16, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » இலங்கை வான்படை 75ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு புதிய தகவல் தொழில் நுட்ப ஆய்வகம் மாணவர்களுக்கு ஒப்படைப்பு.
இலங்கை

இலங்கை வான்படை 75ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு புதிய தகவல் தொழில் நுட்ப ஆய்வகம் மாணவர்களுக்கு ஒப்படைப்பு.

ThanaBy ThanaMarch 27, 2026No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

இலங்கை வான்படை 75ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு புதிய தகவல் தொழில் நுட்ப ஆய்வகம் மாணவர்களுக்கு ஒப்படைப்பு.

இலங்கை வான்படை தனது 75ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, எதிர்கால தலைமுறையின் தகவல் தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்தும் நோக்கில் முக்கிய பங்களிப்பாக, பாடசாலை மாணவர்களின் தகவல் தொழில் நுட்ப அறிவை உயர்த்தும் பொருட்டு ரூபாய் 75 இலட்சத்திற்கு மேற்பட்ட செலவில் நவீன வசதிகளுடன் கூடிய தகவல் தொழில்நுட்ப (IT) ஆய்வகமொன்றை நிறுவி மாணவர்களின் பயன்பாட்டிற்கு வழங்கியுள்ளது.

அதன்படி, அம்பாறை மங்களாராம மகா வித்தியாலயம் மற்றும் மட்டக்களப்பு கொட்டாய்முனை கனிஷ்ட வித்தியாலயத்தில் தகவல் தொழில்நுட்ப ஆய்வகங்கள் இரண்டை மாணவர்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இதன் இரண்டாம் கட்டமாக, நுவரெலியா நானுஓயா பிரதேசத்தில் அமைந்துள்ள டெஸ்ஃபோர்ட் தமிழ் மகா வித்தியாலயத்தில் புதிய தகவல் தொழில்நுட்ப ஆய்வகம் 2026 மார்ச் 27ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.

வான்படை தளபதி எயார் வைஸ் மார்ஷல் பந்து எதிரிசிங்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படுத்தப்பட்ட இந்த சமூக சேவைத் திட்டம், வான்படை தகவல் தொழில்நுட்ப பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டதாகும்.

வான்படை தொழில்நுட்ப அதிகாரிகளின் அர்ப்பணிப்பும் தொழில்முறை திறனும் மூலம் இந்த திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

மின்னியல் மற்றும் கணினி பொறியியல் பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் அசித ஹெட்டியாரச்சி அவர்களின் மேற்பார்வையில், தகவல் தொழில்நுட்ப பணிப்பாளர் குழு கேப்டன் சாணக சூரியாரச்சி அவர்களின் கண்காணிப்பின் கீழ், இலங்கை வான்படை பிட்டுரலாகல முகாமின் கட்டளை அதிகாரி குழு கேப்டன் இந்திக ஜயசுந்தர அவர்களின் தலைமையில் இந்த புதிய ஆய்வகத்தின் கட்டுமானமும் உட்கட்டமைப்பு வசதிகளும் உருவாக்கப்பட்டன.

இந்த குளிரூட்டப்பட்ட புதிய தகவல் தொழில்நுட்ப ஆய்வகம், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் கற்றலுக்கு உகந்த சூழலை வழங்குகிறது. இதில் 15 மேசை கணினிகள் மின்சாரம் வழங்கும் UPS அமைப்புகள் மற்றும் முழுமையான வலையமைப்பு வசதிகள் உள்ளிட்ட நவீன தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த திறப்பு விழாவில் மின்னியல் மற்றும் கணினி பொறியியல் பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் அசித ஹெட்டியாரச்சி அவர்களின் தலைமையில், வான்படை அதிகாரிகள், நிதியுதவியாளர்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் மற்றும் உள்ளூர் மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் ஜானகி சிறிவர்தன ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு!

    October 16, 2026

    ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் பிக்குமாரின் போராட்டம் தொடர்கிறது

    October 16, 2026

    ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகப் போராட்டம் நடத்தத் தடை!

    October 16, 2026

    மலையகத்தில் ‘கே.டானியல் 100’

    October 16, 2026
    Editors Picks

    பது/ எல்வட்டன் தமிழ் வித்தியாலயம் இரண்டு தேசிய விருதுகளை வரலாற்றின் முதன்முறையாக பெற்றுள்ளது.

    October 16, 2026

    வட்டவளையில் லொறியும் ஜீப்பும் நேருக்கு நேர் மோதி விபத்து – ஒருவர் காயம்!

    October 16, 2026

    நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் ஜானகி சிறிவர்தன ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு!

    October 16, 2026

    ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் பிக்குமாரின் போராட்டம் தொடர்கிறது

    October 16, 2026

    பது/ எல்வட்டன் தமிழ் வித்தியாலயம் இரண்டு தேசிய விருதுகளை வரலாற்றின் முதன்முறையாக பெற்றுள்ளது.

    October 16, 2026

    வட்டவளையில் லொறியும் ஜீப்பும் நேருக்கு நேர் மோதி விபத்து – ஒருவர் காயம்!

    October 16, 2026

    நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் ஜானகி சிறிவர்தன ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு!

    October 16, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.