Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மலையக மக்களின் பிரச்சனைகளுக்கு ஜனாதிபதியின் விசேட கவனம்

July 24, 2026

எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் புதிய தலைவரும் உறுப்பினர்களும் நியமனம்

July 24, 2026

கண்டி எசல பெரஹரா ஏற்பாடுகள் குறித்த கலந்துரையாடல்

July 24, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » கண்டி எசல பெரஹரா ஏற்பாடுகள் குறித்த கலந்துரையாடல்
இலங்கை

கண்டி எசல பெரஹரா ஏற்பாடுகள் குறித்த கலந்துரையாடல்

ThanaBy ThanaJuly 24, 2026No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

கண்டி எசல பெரஹரா ஏற்பாடுகள் குறித்த கலந்துரையாடல்

வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி எசல பெரஹரா – 2026 ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (24) முற்பகல் நடைபெற்றது.

வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி எசல பெரஹராவை விமர்சையாக நடத்துவதற்கு அரசாங்கத்தின் பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வது குறித்தும் அதற்கான தயார்நிலை மற்றும் பெரஹரா ஏற்பாடுகளின் தற்போதைய முன்னேற்றம் குறித்தும் இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

பெரஹராவை வெற்றிகரமாக நடத்துவதற்கு அனுசரணை வழங்கும் அனைத்து அரச நிறுவனங்கள் மற்றும் நிதி அனுசரணை வழங்கும் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் வழங்கும் பங்களிப்புகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

பெரஹராவைக் காண்பதற்காக வருகை தரும் பக்தர்களுக்குத் தேவையான நீர், மின்சாரம், சுகாதார வசதிகள், போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளை வழங்குவது குறித்தும், பெரஹராவிற்கு யானைகளைச் பெற்றுக்கொள்வது குறித்தும் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.

கண்டி எசல பெரஹராவை மிகவும் வெற்றிகரமாக நடத்துவதற்குத் தேவையான அதிகபட்ச ஆதரவையும் தலையீட்டையும் அரசாங்கம் வழங்கும் என ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தெரிவித்தார்.

மத்திய மலைநாட்டின் மிகப்பெரிய சமய மற்றும் கலாசார நிகழ்விற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட அரசாங்கம் வழங்கிவரும் பங்களிப்பிற்கு மல்வத்து மற்றும் அஸ்கிரிய ஆகிய இரு தரப்பு ஆசிகளும் கிடைக்கும் என மல்வத்து மகா விகாரையின் முதன்மைப் பதிவாளர் வண, கலாநிதி பஹமுனே ஸ்ரீ சுமங்கல நாயக்க தேரர் தெரிவித்தார்.

இம்முறை கும்பல் பெரஹரா, ஆகஸ்ட் 18 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், ரந்தோலி பெரஹரா, ஆகஸ்ட் 23 ஆம் திகதி முதல் நடைபெறும். இறுதி மகா ரந்தோலி பெரஹரா 27 ஆம் திகதி இரவு வீதி உலா வரும். அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 28 ஆம் திகதி அதிகாலை “திய கெப்பீம” சம்பிரதாய நிகழ்வு நடைபெற்ற பின்னர், அன்றைய தினம் பகல் பெரஹரா, வீதி உலா வருவதுடன் எசல பெரஹரா நிறைவடையும்.

ஸ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல, மத்திய மாகாண ஆளுநரின் செயலாளர் இஷான் விஜேதிலக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, மத்திய மாகாண பிரதம செயலாளர் ஜி. எச். எம். ஏ. பிரேமசிங்க, பௌத்த மத அலுவல்கள் ஆணையாளர் நாயகம் காமினி சேனாரத்ன, பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் ஹர்ஷ விதானஆரச்சி, கண்டி மாவட்ட செயலாளர் இந்திக உடவத்த, மத்திய மாகாண கல்விச் செயலாளர் மதுபானி பியசேன, கண்டி பிரதேச செயலாளர் அமில நவரத்ன, கண்டி மாநகர ஆணையாளர் இந்திகா குமாரி ஆகியோருடன், அரச நிறுவனங்களின் அதிகாரிகள், அனுசரணை நிறுவனங்களின் அதிகாரிகள், பாதுகாப்புப் பிரிவினரின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2026-07-24

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    மலையக மக்களின் பிரச்சனைகளுக்கு ஜனாதிபதியின் விசேட கவனம்

    July 24, 2026

    எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் புதிய தலைவரும் உறுப்பினர்களும் நியமனம்

    July 24, 2026

    வலுவான பெருந்தோட்டத் துறைக்காக நிறுவனங்களை ஒன்றிணைக்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துங்கள்-ஜனாதிபதி

    July 24, 2026

    அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 116 மேலதிக வாக்குகளால் தோல்வி

    July 24, 2026
    Editors Picks

    மலையக மக்களின் பிரச்சனைகளுக்கு ஜனாதிபதியின் விசேட கவனம்

    July 24, 2026

    எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் புதிய தலைவரும் உறுப்பினர்களும் நியமனம்

    July 24, 2026

    கண்டி எசல பெரஹரா ஏற்பாடுகள் குறித்த கலந்துரையாடல்

    July 24, 2026

    வலுவான பெருந்தோட்டத் துறைக்காக நிறுவனங்களை ஒன்றிணைக்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துங்கள்-ஜனாதிபதி

    July 24, 2026

    மலையக மக்களின் பிரச்சனைகளுக்கு ஜனாதிபதியின் விசேட கவனம்

    July 24, 2026

    எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் புதிய தலைவரும் உறுப்பினர்களும் நியமனம்

    July 24, 2026

    கண்டி எசல பெரஹரா ஏற்பாடுகள் குறித்த கலந்துரையாடல்

    July 24, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.